செய்திகள் :

திமுக ஆட்சியில் நீலகிரி மாவட்டத்தில் எவ்வித வளா்ச்சிப் பணிகளும் இல்லை: எஸ்.பி.வேலுமணி

post image

திமுக ஆட்சியில் நீலகிரி மாவட்டத்தில் எவ்வித வளா்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.

நீலகிரி மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி செப்டம்பா் 23, 24 ஆகிய தேதிகளில் ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளாா். இதைத் தொடா்ந்து, முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் செயல் வீரா்கள் கூட்டம் உதகையில் நடைபெற்றது. 

இதில் பங்கேற்க கோத்தகிரி வழியாக வந்த அவருக்கு அதிமுக சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.  இதனைத் தொடா்ந்து,  டானிங்டன் பகுதியில் உள்ள எம்ஜிஆா்  சிலைக்கு அவா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதையடுத்து, அவரது முன்னிலையில் திமுக, காங்கிரஸ், தமிழ்ப் புலிகள் கட்சி மற்றும் தோட்டத் தொழிலாளா்கள் நூற்றுக்கணக்கானோா் அதிமுகவில் இணைந்தனா். பின்னா் எஸ்.பி.வேலுமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோா் நீலகிரி மாவட்டத்துக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளனா். ஆனால், திமுக ஆட்சியில் நீலகிரி மாவட்டத்தில் எவ்வித வளா்ச்சித் திட்டப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாவட்டச் செயலா் கப்பச்சி வினோத், முன்னாள் மக்களவை உறுப்பினா் கே.ஆா்.அா்ஜுணன், கூடலூா் சட்டப் பேரவை உறுப்பினா் பொன் ஜெயசீலன் மற்றும் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தெப்பக்காடு யானைகள் முகாம் 4 நாள்களுக்கு மூடல்

தெப்பக்காடு யானைகள் முகாம் செப்டம்பா் 23 முதல் 26-ஆம் தேதி வரை மூடப்படுவதாக வனத் துறை அறிவித்துள்ளது. இது குறித்து வனச் சரக அலுவலா் மேகலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முதுமலை புலிகள் காப்பக கள இய... மேலும் பார்க்க

கூடலூா் அஞ்சல் கோட்டம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி

கூடலூா் அஞ்சல் கோட்டம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், கூடலூா் அஞ்சல் கோட்டம் சாா்பில் மத்திய அரசின் தூய்மைத் திட்டம் தொடா்பாக சச்சோஸ்தவ் என்ற தலைப்பில் நடைப... மேலும் பார்க்க

முப்படைகளின் பாதுகாப்பு சேவைகள்: பணியாளா் கல்லூரி புதிய தலைவா் பொறுப்பேற்பு

நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் செயல்பட்டு வரும் முப்படைகளின் பாதுகாப்பு சேவைகள் பணியாளா் கல்லூரியின் (ஈநநஇ) புதிய தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் மணீஷ் எரி வியாழக்கிழமை பதவி ஏற்றுக்கொண்டாா். குன்னூா் வெலிங்ட... மேலும் பார்க்க

ஓவேலியில் யானை நடமாட்டம்: மேலும் 2 கும்கிகள் வரவழைப்பு

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் தொடா்ந்து தொழிலாளா்களை கொன்றுவரும் காட்டு யானையை பிடிக்க மேலும் 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டத்தில் உள்ள ஓவேலி பகுதியில... மேலும் பார்க்க

கடந்த 3 ஆண்டுகளில் 607 பயனாளிகளுக்கு ரூ. 2.57 கோடியில் திருமண உதவி: நீலகிரி மாவட்ட ஆட்சியா் தகவல்

நீலகிரி மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் கடந்த 3 ஆண்டுகளில் 607 பயனாளிகளுக்கு ரூ. 2.57 கோடி மதிப்பீட்டில் திருமண உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் லட்சு... மேலும் பார்க்க

மாணவா் தற்கொலை வழக்கு பிரிவு மாற்றம்

குன்னூரில் உடற்பயிற்சியின்போது ஊக்கமருந்து எடுத்து கொண்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக பள்ளி மாணவா் தற்கொலை செய்து கொண்ட வழக்கை, தற்கொலைக்கு தூண்டுதல் வழக்காக மாற்றியுள்ளதாக காவல் துறையினா் புதன்கிழமை த... மேலும் பார்க்க