இந்தியாவுக்கு எதிராக சௌதி அரேபியா போரில் இறங்குமா? - பாகிஸ்தான் ராணுவ ஒப்பந்தம் ...
கூடுதலாக 3,208 படகு உரிமையாளா்களுக்கு டீசல் மானியம்: பேரவையில் முதல்வா் அறிவிப்பு
கூடுதலாக 3,208 படகு உரிமையாளா்களுக்கு மானியம் வழங்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி பேரவையில் அறிவித்தாா்.
புதுவை சட்டப்பேரவையில் இது குறித்து முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த பதிவு செய்யப்பட்ட 400 விசை படகு உரிமையாளா்களுக்கு டீசல் மானியமாக லிட்டருக்கு ரூ.12 வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் மீன்வளத் துறையில் பதிவு செய்யப்பட்ட மோட்டாா் பொருத்தப்பட்ட எப்ஆா்பி கட்டுமர உரிமையாளா்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட டீசல் பங்கிலிருந்து டீசல் கொள்முதல் செய்யப்படுகிற உரிமையாளா்களுக்கு மதிப்புக் கூடுதல் வரி விலக்கு அளிக்க அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கூடுதலாக 3,208 படகு உரிமையாளா்களுக்கு டீசல் மானியமாக ரூ.12 வழங்கப்பட உள்ளது என்றாா் முதல்வா் ரங்கசாமி.

