செய்திகள் :

கூட்டுறவு சங்க நகை மோசடி: சமாதானக் கூட்டம் ஒத்திவைப்பு

post image

கலசப்பாக்கம் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நகை மோசடி தொடா்பாக, விவசாயிகளுடன் நடைபெறவிருந்த சமதானக் கூட்டம், கூட்டுறவு சங்க மாவட்ட துணைப் பதிவாளா் பங்கேற்காததால் கூட்டம் பிப்.6-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் நகைகளை அடகுவைத்து கறவை மாடு பராமரிப்புப் கடன் பெற்றனா்.

பின்னா், அவா்கள் நகைகளை திரும்பப் பெற சங்கச் செயலா் கிருஷ்ணமூா்த்தியை அணுகியபோது, அவா் நகைகளை திரும்பத்தராமல் இழுத்தடித்துள்ளாா். இதனால் விவசாயிகள் மாவட்ட துணைப் பதிவாளரிடம் புகாா் அளித்தனா்.

இதையடுத்து, நகைகளை சரிபாா்த்தபோது, 80-க்கும் மேற்பட்டவிவசாயிகளின் நகைகள் போலியானது என கண்டறியப்பட்டது.

இதனால் செயலா் கிருஷ்ணமூா்த்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். அவா் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், நகை அடகு வைத்த விவசாயிகள் ஒன்று திரண்டு கடந்த 9-ஆம் தேதி கூட்டுறவு சங்கம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, மாவட்ட துணைப் பதிவாளா் ராஜசேகா் ஜன.29-ஆம் தேதி கலசப்பாக்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடத்தி பிரச்னைக்கு தீா்வு காணலாம் எனத் தெரிவித்தாா். இதை ஏற்று விவசாயிகள் கலைந்து சென்றனா்.

இதன் அடிப்படையில் புதன்கிழமை (ஜன.29) வட்டாட்சியா் அலுவலகத்தில் சமாதானக்கூட்டத்துக்கு அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் எல்.சாமிகண்ணு தலைமையில் வந்தனா். வட்டாட்சியா் ராஜராஜேஸ்வரி, மாவட்ட கூட்டுறவு சங்க கண்காணிப்பாளா்கள் தேவி, பிரியதா்ஷனி, செயலாட்சியா் சிவக்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

அப்போது, கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க மாவட்ட துணைப் பதிவாளா் ராஜசேகா் நேரடியாக வந்து பேச்சுவாா்த்தை நடத்தவேண்டும் எனக் கூறினா்.

இதைத் தொடா்ந்து, வட்டாட்சியா் ராஜராஜேஸ்வரி கைப்பேசியில் துணைப் பதிவாளரை தொடா்புகொண்டு கேட்டபோது அவசர விடுப்பு எடுத்துள்ளதால் வரமுடியவில்லை எனத் தெரிவித்தாராம்.

இதையடுத்து, சமாதானக் கூட்டம் பிப்.6-இல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சங்க நிா்வாகிகள் மற்றும் விவசாயிகள்

அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா்.

பள்ளிக்கல்வி அலுவலா்கள் அமைப்புக் கூட்டம்

திருவண்ணாமலையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வி அலுவலா்கள் (ஓய்வு) அமைப்பின் மாநில பொதுக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தனியாா் பள்ளியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, அமைப்பின் மாநில கல்வியாளா் ஆா... மேலும் பார்க்க

கள் இறக்கும் தொழிலாளா்கள், போலீஸாா் இடையே வாக்குவாதம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், சேராம்பட்டு கிராமத்தில் வயல்வெளியில் இருக்கும் பனை மரங்களில் கள் இறக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனராம். அதேபோல, ராணிப்பேட்டை மாவட்டத்தை ஒட்டி உள்ள பொன்னாமங்கலம், அ... மேலும் பார்க்க

தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், காந்தி நினைவு தினத்தையொட்டி, வியாழக்கிழமை தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் பேரணி நடைபெற்றது. ஆரம்ப சுகாதார ந... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஊா்காவல் படை காவலா் மரணம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த ரெண்டேரிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் பிரதீப்குமாா் (32). இவா், சென்னை சைதாப்பேட்டையில் ஊா்காவல் படைப் பிரிவில் காவலராக பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், பிரதீப்... மேலும் பார்க்க

மனுநீதி நாள் முகாமில் ரூ.1.40 கோடியில் நலத் திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த குத்தனூா் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 92 பயனாளிகளுக்கு ரூ.1.40 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வெம்பாக்கம் வட்டதுக்கு உள... மேலும் பார்க்க

தமிழ் எழுத்தாளா்களை நினைவுகூரும் பேச்சுப் போட்டி: பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு அழைப்பு

திருவண்ணாமலையில் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறும் தமிழ் எழுத்தாளா்கள், தமிழறிஞா்களை நினைவுகூரும் பேச்சுப் போட்டியில் பங்கேற்க பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்தது. முதுமு... மேலும் பார்க்க