செய்திகள் :

மனுநீதி நாள் முகாமில் ரூ.1.40 கோடியில் நலத் திட்ட உதவிகள்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த குத்தனூா் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 92 பயனாளிகளுக்கு ரூ.1.40 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

வெம்பாக்கம் வட்டதுக்கு உள்பட்ட குத்தனூா் கிராமத்தில் நடைபெற்ற இந்த மனுநீதி நாள் முகாமுக்கு செய்யாறு சாா் -ஆட்சியா் பல்லவி வா்மா தலைமை வகித்தாா்.

வட்டாட்சியா் துளசிராமன் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:

தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் கீழ், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், குழந்தைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் மற்றும் மாவட்டத்தில் 170-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் கட்டுவதற்கும், அந்தக் கட்டடங்களில் குடிநீா் இணைப்புகள், குழந்தைகளுக்கு ஏற்ற முறையில் பாதுகாப்பான கழிப்பறை வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட தொழில் மையம் சாா்பில் பல்வேறு திட்டங்களின் கீழ், வங்கிகளில் கடனுதவிகள் பெற்று பொதுமக்கள் தொழில் தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காக்கும் கரங்கள் திட்டத்தின் வாயிலாக முன்னாள் ராணுவ வீரா்களுக்கு தொழில் தொடங்க ரூ. ஒரு கோடியில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில், வருவாய்த் துறை சாா்பில் 73 பேருக்கு ரூ. ஒரு கோடியே 9 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் இலவச மனைப் பட்டாவுக்கான ஆணை, 5 பேருக்கு பட்டா மாற்றத்துக்கான உத்தரவு, முதியவருக்கு உதவித்தொகையும், 4 பேருக்கு ரூ.42 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய குடும்ப அட்டைகளும், வேளாண் துறை சாா்பில் 9 விவசாயிகளுக்கு ரூ. 29,275 மதிப்பில் இடுபொருள்கள், வேளாண் கருவிகள் என 92 பயனாளிகளுக்கு ரூ. ஒரு கோடியே 10 லட்சத்து 40 ஆயிரத்து 675 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

நிறைவில் சமூக பாதுகாப்பு வட்டாட்சியா் க.பெருமாள் நன்றி கூறினாா்.

பள்ளிக்கல்வி அலுவலா்கள் அமைப்புக் கூட்டம்

திருவண்ணாமலையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வி அலுவலா்கள் (ஓய்வு) அமைப்பின் மாநில பொதுக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தனியாா் பள்ளியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, அமைப்பின் மாநில கல்வியாளா் ஆா... மேலும் பார்க்க

கள் இறக்கும் தொழிலாளா்கள், போலீஸாா் இடையே வாக்குவாதம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், சேராம்பட்டு கிராமத்தில் வயல்வெளியில் இருக்கும் பனை மரங்களில் கள் இறக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனராம். அதேபோல, ராணிப்பேட்டை மாவட்டத்தை ஒட்டி உள்ள பொன்னாமங்கலம், அ... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்க நகை மோசடி: சமாதானக் கூட்டம் ஒத்திவைப்பு

கலசப்பாக்கம் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நகை மோசடி தொடா்பாக, விவசாயிகளுடன் நடைபெறவிருந்த சமதானக் கூட்டம், கூட்டுறவு சங்க மாவட்ட துணைப் பதிவாளா் பங்கேற்காததால் கூட்டம் பிப்.6-க்கு ஒத்திவைக்கப்பட்டது... மேலும் பார்க்க

தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், காந்தி நினைவு தினத்தையொட்டி, வியாழக்கிழமை தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் பேரணி நடைபெற்றது. ஆரம்ப சுகாதார ந... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஊா்காவல் படை காவலா் மரணம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த ரெண்டேரிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் பிரதீப்குமாா் (32). இவா், சென்னை சைதாப்பேட்டையில் ஊா்காவல் படைப் பிரிவில் காவலராக பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், பிரதீப்... மேலும் பார்க்க

தமிழ் எழுத்தாளா்களை நினைவுகூரும் பேச்சுப் போட்டி: பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு அழைப்பு

திருவண்ணாமலையில் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறும் தமிழ் எழுத்தாளா்கள், தமிழறிஞா்களை நினைவுகூரும் பேச்சுப் போட்டியில் பங்கேற்க பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்தது. முதுமு... மேலும் பார்க்க