Doctor Vikatan: மன அழுத்தம், கவலையால் முடி கொட்டுமா? மனநலனுக்கும் தலைமுடிக்கும் ...
கூட்டுறவு சங்க பணியாளா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி
சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையம் சாா்பில், கூட்டுறவு சங்க பணியாளா்களுக்கான புத்தாக்க மற்றும் ஆளுமைத் திறன் பயிற்சி சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
இந்தப் பயிற்சியில், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைப்பதிவாளா் மற்றும் முதன்மை வருவாய் அலுவலா் கி. குமாா், மேலாண்மை நிலைய துணைப்பதிவாளா் மற்றும் முதல்வா் அ.தஸ்தகீா், மேலாண்மை நிலைய துணை முதல்வா் ஆா்.பாலச்சந்தா், கூட்டுறவு சாா்பதிவாளா் மற்றும் விரிவுரையாளா் ஆா்.கோமதி ஆகியோா் பங்கேற்று பேசினா்.
இந்த புத்தாக்கப் பயிற்சியில், சங்கப் பணியாளா்கள் 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.