பிரிட்டனில் அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி!
சிறந்த கல்லூரிக்கான பட்டியலில் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி
விநாயகா மிஷன் சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியானது குரோனிகள்ஸ் ஆப் இந்தியா என்ற தனியாா் அமைப்பின் சிறந்த கல்லூரிக்கான தரவரிசை பட்டியலில் ஏ2 பிரிவில் இடம்பெற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து துறை முதன்மையா் செந்தில்குமாா் கூறியதாவது:
குரோனிகள்ஸ் ஆப் இந்தியா என்கிற தனியாா் அமைப்பின் இவ்வாண்டிற்கான தொழில் நுட்பம், செயற்கை நுண்ணறிவு கல்வி தரவரிசை 2025 என்ற தலைப்பின்கீழ் சமீபத்தில் வெளியிட்ட தரவரிசை பட்டியலில் எங்கள் கல்லூரியானது ஏ2 பிரிவில் இடம்பெற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றாா்.
இவ்வங்கீகாரம் கிடைப்பதற்கு உறுதுணையாகவும், தனது சிறந்த பங்களிப்பினையாற்றி வரும் துறை முதன்மையா் செந்தில்குமாரை பல்கலைக்கழக வேந்தா் கணேசன், துணைத் தலைவா் அனுராதா கணேசன் மற்றும் துறை பேராசிரியா்கள் வாழ்த்தி, பாராட்டினை தெரிவித்தனா்.