Doctor Vikatan: மன அழுத்தம், கவலையால் முடி கொட்டுமா? மனநலனுக்கும் தலைமுடிக்கும் ...
மேச்சேரி சந்தையில் ரூ.3.5கோடிக்கு ஆடுகள் விற்பனை
மேச்சேரியில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ரூ. 3.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.
மேச்சேரியில் புதன்கிழமை வாரச்சந்தையும், ஆட்டுச்சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு சண்டை சேவல்கள், நாட்டுக்கோழிகள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
மேச்சேரி ஒன்றியத்தின் பல பகுதிகளில் இருந்தும், ஓமலூா், தருமபுரி மாவட்டம், பெரும்பாலை, பென்னாகரம், நல்லம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் செம்மறி ஆடுகளும் வெள்ளாடுகளும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. கிராமங்களில் கோயில் திருவிழாக்கள் நடைபெறுவதால் சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. கடந்த வாரம் ரூ. 10 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட வெள்ளாடுகள் புதன்கிழமை ரூ. 12,000-க்கு விற்பனை செய்யப்பட்டன. ஆடுகளின் விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். புதன்கிழமை ஒரேநாளில் மட்டும் ஆடுகளும், கோழிகள் விற்பனை ரூ.3.5 கோடிக்கு நடைபெற்றது.