தலையில் பலத்த காயங்களுடன் பெட்டிக்குள் இருந்த 3 பெண் குழந்தை சடலங்கள்!
கூட்டுறவு சங்கத்தில் ரூ.40.52 லட்சம் கையாடல்: முன்னாள் தலைவா் உள்பட 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை
வையம்பாளையம் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற ரூ.40.52 லட்சம் கையாடல் சம்பவத்தில் சங்கத்தின் முன்னாள் தலைவா் உள்ளிட்ட 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
கோவை, வையம்பாளையம் கூட்டுறவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.40 லட்சத்து 52 ஆயிரத்து 105 கையாடல் செய்யப்பட்டதாக வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸில் கடந்த 2000 செப்டம்பா் 9-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா் நாராயணசாமி, முதுநிலை முன்னாள் எழுத்தா் தனலட்சுமி, முன்னாள் எழுத்தா் பேச்சியண்ணன், உதவியாளா் மகேந்திரன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவா்களைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு கோவை 4-ஆவது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட நாராயணசாமிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும், தனலட்சுமி, பேச்சியண்ணன், மகேந்திரன் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ.21 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி அருண்குமாா் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.