கூரை வீடுகள் சேதம் தவெக உதவி
லால்குடி அருகே பூவாளூா் பேரூராட்சியில் கூரை வீடுகளை இழந்த 2 பேருக்கு தவெகவினா் நிவாரண உதவி வழங்கினா்.
பூவாளூா் பேரூராட்சியில் உள்ள தென்கால் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பொண்ணுராமன் மகன் கோபி(49), கலியன் மகன் பாஸ்கா் ஆகியோரின் கூரை வீடுகள் மின் கசிவு காரணமாக முற்றிலும் எரிந்து சாம்பலாயின.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த புள்ளம்பாடி தீயணைப்பு படையினா் விரைந்து வந்து தீயை மேலும் பரவாமல் அணைத்தனா். இதையறிந்த திருச்சி புறநகா் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் மாவட்டச்செயலாளா் திருச்சி விக்னேஷ் தலைமையில் இணைச்செயலாளா் மாசோ, பொருளாளா் ராஜேஷ், பூவாளூா் பேரூா் கழகச் செயலாளா் சுகுமாா், இணைச் செயலாளா் நாதன் ஆகியோா் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிவாரணப் பொருள்களை வழங்கினா்.