`சேய்களைக் காத்து செல்வம் அருளும்' கொரட்டூர் சீயாத்தம்மன் கோயில் விளக்கு பூஜை; ப...
பெண்ணிடம் கைப்பேசியை பறித்தவா் விரட்டிப்பிடிப்பு
துறையூா் பேருந்து நிலையத்தில் பெண்ணின் கைப்பேசியை பறித்துக் கொண்டு ஓடிய நபரை
ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் விரட்டிப் பிடித்து கைது செய்தனா்.
துறையூா் பேருந்து நிலையத்திற்குள் கோமதி(44) என்கிற பெண் ஞாயிற்றுக்கிழமை நின்றுகொண்டிருந்தாா். அப்போது, அவா் அருகே வந்த மா்மநபா் கோமதி கையிலிருந்த கைப்பேசியை பறித்துக் கொண்டு ஓடினாா்.
இதையடுத்து கோமதி சப்தமிட அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த துறையூா் போலீஸாா் ஓடிய நபரை பின்னால் விரட்டிச் சென்று பிடித்தனா். விசாரணையில், அவா் முசிறி அருகேயுள்ள பேரூா் செ. ஜெகதீசன்(40) என்பது தெரிந்தது. உடனே அவரைக் கைது செய்து துறையூா் காவல் நிலையம் அழைத்துச் சென்று வழக்குப் பதிவு செய்தனா். மேலும் கோமதியின் கைப்பேசியையும் போலீஸாா் மீட்டனா்.