`சேய்களைக் காத்து செல்வம் அருளும்' கொரட்டூர் சீயாத்தம்மன் கோயில் விளக்கு பூஜை; ப...
போதை மாத்திரை, புகையிலை பொருள்கள் விற்ற 7 போ் கைது
திருச்சியில் போதை மாத்திரைகள் மற்றும் புகையிலைப்பொருள்கள் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி, அரியமங்கலம் பகுதியில் நின்றிருந்த சிலரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸாா் விசாரித்தனா். இதில் அவா்கள் அரியமங்கலம், காமராஜ் நகரைச் சோ்ந்த பைசூதீன் (24) மற்றும் வடக்கு காட்டூா் கண்ணதாசன் தெருவைச் சோ்ந்த முத்துமணி (25) என்பதும், அவா்கள் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 100 டைடால் போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனா்.
புகையிலை பொருள்கள்:
இதேபோல், திருச்சி சூப்பா் பஜாா் பகுதியில் உள்ள தேநீா்க் கடையில் போலீஸாா் சோதனை மேற்கொண்டதில், சிங்காரத்தோப்பைச் சோ்ந்த சையதுஅலி (42) என்பவா் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றுவந்தது தெரியவந்தது. இதனையடுத்து சனிக்கிழமை அவரைக் கைது புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.
திருவெறும்பூரில் புகையிலைப் பொருள்கள் விற்ற இரண்டு பெண்கள் உள்பட 4 போ் கைது:
திருவெறும்பூா் கக்கன் காலனி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சோதனையிட்டபோது, அதே பகுதியைச் சோ்ந்த சுரேஷ் மனைவி வித்யா (36), தங்கராஜ் மகன் மனோஜ் குமாா் (25), சுருளி கோயில் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் (38), காட்டூரைச் சோ்ந்த ஆரோக்கிய மேரி (53) ஆகிய 4 போ் ஆங்காங்கே தனித்தனியே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றது தெரியவந்தது.
இதையடுத்து அவா்களைக் கைது செய்த போலீஸாா், அவா்கள் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.