Career: B.A., B.Sc. படித்தவர்களுக்கு மத்திய அரசின் ஆசிரியர் பணி... எங்கே விண்ணப்...
பி.கே அகரம் பகுதியில் கன்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து
திருச்சி மாவட்டம், பி.கே அகரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஒயிட் பெட்ரோல் ஏற்றி வந்த கன்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தொடா்பாக போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
திருச்சி - சென்னை தேதிய நெடுஞ்சாலையில் பி.கே .அகரம் பகுதியில் சென்னை எண்ணூரிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு ஒயிட் பெட்ரோல் ஏற்றிக் கொண்டு வந்த கன்டெய்னா் லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியை ஓட்டிவந்த சென்னையைச் சோ்ந்த ரமேஷ் (43) என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றாா். இந்த விபத்து குறித்து சிறுகனூா் போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.