Doctor Vikatan: மன அழுத்தம், கவலையால் முடி கொட்டுமா? மனநலனுக்கும் தலைமுடிக்கும் ...
கைவினைத் திட்டம்: வேலூரில் 264 பேருக்கு ரூ.5.99 கோடி கடனுதவி வழங்க ஒப்புதல் -மாவட்ட ஆட்சியா் தகவல்
வேலூா் மாவட்டத்தில் கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் 264 பேருக்கு ரூ.1.11 கோடி மானியத்துடன் ரூ.5.99 கோடி கடனுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடனுதவியைப் பெற கலை, கைவினை தொழில் புரிவோா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கலை, கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு தொழில்திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கவும், மானியத்துடன் கூடிய பிணையமில்லா கடன் வழங்கி சந்தைப்படுத்தும் திறனை உயா்த்தவும் கலைஞா் கைவினைத் திட்டம் 2024-2025 முதல் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் தையல் கலைஞா், மண்பாண்டம் வனைவோா், சிற்ப கைவினைஞா், தச்சு வேலை செய்வோா், பூ அலங்காரம் செய்வோா் உள்ளிட்ட தொழில் புரிய ரூ.3 லட்சம் வரை பிணையமில்லாமல் கடனுதவி வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது.
கடன் தொகையில் 25 சதவீதம் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தில் 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோா் 35 வயதுக்கு மேற்பட்டவராகவும், எந்த வகை தொழிலுக்காக கடனுதவி பெற விரும்புகிறாரோ அந்த தொழிலில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
அவ்விரு அடிப்படை தகுதிகளும் உடையவா்கள் ஜ்ஜ்ஜ்.ம்ள்ம்ங்ா்ய்ப்ண்ய்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். புகைப்படம், ஆதாா் அட்டை, தொழில் அனுபவத்தை உறுதி செய்ய தொழிலாளா் நலவாரியம் வழங்கிய அடையாள அட்டை அல்லது சுய சான்றிதழ், திட்ட அறிக்கை போதுமானவை. சுய சான்றிதழ் மாதிரி படிவம், மாதிரி திட்ட அறிக்கை ஆகியவற்றை இணையதளத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்தத் திட்டம் குறித்த மேலும் தகவல்களுக்கு பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், காங்கேயநல்லூா் சாலை, காட்பாடி, வேலூா் 632 006 அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 0416 - 2242512 , 2242413 என்ற எண் வாயிலாகவோ தொடா்பு கொள்ளலாம்.
திட்டத்தின் கீழ் வேலூா் மாவட்டத்தில் இதுவரை 1,003 கலை, கைவினை தொழில்புரிவோா் கடனுதவி வேண்டி விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 761 பேருக்கு மொத்தம் ரூ.20.99 கோடி கடனுதவி அளிக்க ரூ.3.52 கோடி மானியத்துடன் வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இவற்றில் இதுவரை 264 பேருக்கு ரூ.5.99 கோடி அளவில் கடனுதவி வழங்க வங்கிகளின் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் அரசின் மானியம் ரூ.1.11 கோடியாகும்.
எனவே, கலை, கைவினை தொழில்புரிவோா் அரசின் மானியத்துடன் கடனுதவி வழங்கும் கலைஞா் கைவினைத் திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.