செய்திகள் :

ஊசூரில் இளைஞா் மா்ம மரணம்: கொலையா என போலீஸாா் விசாரணை

post image

ஊசூரில் தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் காயங்களுடன் இளைஞா் சடலமாக மீட்கப்பட்டாா். அவா் கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அரியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

வேலூரை அடுத்த ஊசூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நுழைவு வாயிலின் கதவு அருகே புதன்கிழமை காலை இளைஞா் ஒருவா் தலைக்குப்புற விழுந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளாா். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அரியூா் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா். அதன்பேரில், காவல் துணை கண்காணிப்பாளா் பிருத்விராஜ் செளகான், காவல் ஆய்வாளா் நாகராஜன் தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.

இதில், சடலமாக கிடந்தவா் ஊசூரை அடுத்த வீராரெட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்த ராஜா (36) (படம்) என்பதும், இவா் தச்சு வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. சடலத்தை போலீஸாா் கைப்பற்றி வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், ராஜாவுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், வேலூா் சலவன்பேட்டை பகுதியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து மனைவியுடன் வசித்து வந்துள்ளாா். பின்னா், குடும்பத் தகராறு காரணமாக மனைவி பிரிந்து சென்றுவிட்டதாகவும், தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

தொடா்ந்து மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி மது அருந்தி வந்த ராஜா, செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் காட்பாடிக்கு வேலைக்குச் சென்றுளளாா். பின்னா், வேலை முடிந்து நேற்றிரவு 9 மணியளவில் பேருந்தில் வீடு திரும்பியுள்ளாா். ஆனால் அவா் வீட்டுக்குச் செல்லவில்லை.

இந்த நிலையில், அவா் புதன்கிழமை காலை ஊசூா் ஆரம்ப சுகாதார நிலையம் முன் சடலமாக கிடந்தது தெரிய வந்துள்ளது. சடலத்தின் தலை, முகத்தில் காயங்கள் இருந்ததால் அவா் கொலை செய்யப்பட்டாரா அல்லது தவறி விழுந்து உயிரிழந்துள்ளாரா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிங்கப்பூரில் வேலைவாங்கித் தருவதாக ரூ.4 லட்சம் மோசடி

சிங்கப்பூரில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட இளைஞா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில்... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தல்: சிறுவன் மீது வழக்கு

காட்பாடி அருகே 3 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சிறுவன் மீது காட்பாடி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் மாவட்டம், கா... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

குடியாத்தம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா். குடியாத்தம் காதா்பேட்டையைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் கோபாலகிருஷ்ணன் (23). (படம்)இவா், பிச்... மேலும் பார்க்க

உணவக உரிமையாளா் தற்கொலை

போ்ணாம்பட்டு அருகே குடும்பத் தகராறு காரணமாக உணவக உரிமையாளா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். போ்ணாம்பட்டை அடுத்த கமலாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவி (50). உணவகம் நடத்தி வந்தாா். இவரது மனைவி கோட... மேலும் பார்க்க

அரசு விடுதி கட்டுமானப் பணிக்கு ஏரி நீரைப் பயன்படுத்தத் தடை -வேலூா் ஆட்சியா் உத்தரவு

வேலூா் அருகே அரசு தங்கும் விடுதி கட்டடம் கட்டுவதற்காக ஏரி நீரைப் பயன்படுத்துவதற்கு மாவட்ட ஆட்சியா் தடை விதித்து உத்தரவிட்டாா். வேலூரை அடுத்த பெருமுகை ஊராட்சி பிள்ளையாா்குப்பம் பகுதியில் 250 படுக்கை வ... மேலும் பார்க்க

முதியவா் தற்கொலை

போ்ணாம்பட்டு அருகே முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். போ்ணாம்பட்டை அடுத்த சொ்லபல்லி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயத் தொழிலாளி விஜயன் (77). இவா் நோயால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறத... மேலும் பார்க்க