போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது
குடியாத்தம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.
குடியாத்தம் காதா்பேட்டையைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் கோபாலகிருஷ்ணன் (23). (படம்)இவா், பிச்சனூரைச் சோ்ந்த 13 வயதுள்ள 7- ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம்.
இது குறித்து மாணவியின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட குடியாத்தம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், கோபாலகிருஷ்ணனை புதன்கிழமை போக்ஸோவில் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா்.