ஃபேஸ்புக் பயனர்களின் நண்பர்கள் பட்டியலை நீக்க திட்டமிட்ட மார்க்!
கொடைக்கானலில் மழை: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானலில் பெய்து வரும் தொடா் மழையால் மேல்மலைக் கிராமங்களுக்குச் செல்லும் சாலையில் ஞாயிற்றுக்கிழமை மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கொடைக்கானலில் கடந்த 4 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை பெய்த மழையால், கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களுக்குச் செல்லும் கோசன் சாலையில் மரம் விழுந்தது. இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த நெடுஞ்சாலைத் துறையினா், தீயணைப்புத் துறையினா், வனத் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலமாக கீழே விழுந்த மரத்தை அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனா்.