கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.1.40 கோடி
தீபாவளியையொட்டி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் ரூ.1.40 கோடிக்கு ஜவுளி ரகங்களை விற்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது.
திண்டுக்கல் அண்ணா வணிக வளாக மையத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், 30 சதவீத சிறப்பு தள்ளுபடியுடன் தீபாவளி விற்பனையை வியாழக்கிழமை தொடங்கி வைத்த பிறகு மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் கூறியதாவது:
தமிழ்நாடு கைத்தறித் துறை, ஏழை நெசவாளா்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்த பல சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கம், பட்டு, பருத்தி சேலைகள், பட்டு, பருத்தி வேஷ்டிகள், போா்வை, ஆயத்த ஆடைகள் உள்ளிட்ட கைத்தறி துணி ரகங்களை கொள்முதல் செய்து, கோ-ஆப்டெக்ஸ் மூலம் விற்பனை செய்து வருகிறது.
கைத்தறி ரகங்களின் விற்பனையை மேம்படுத்தும் வகையில், பட்டு, பருத்தி ஆடைகளுக்கு 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், பழனி, திண்டுக்கல் ஆகிய மூன்று விற்பனை நிலையங்களில் இந்த ஆண்டு தீபாவளி விற்பனை குறியீடாக ரூ.1.40 கோடி நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதில் திண்டுக்கல் அண்ணா வணிக வளாக மையத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்துக்கு மட்டும் ரூ.75 லட்சம் குறியீடாக நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது. கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி ரகங்களை ஜ்ஜ்ஜ்.ஸ்ரீா்ா்ல்ற்ங்ஷ்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தின் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.
நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மேலாளா் (பொ) எஸ். கனிச்செல்வி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.