முப்பெரும் தியாகிகளுக்கு மரியாதை
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சாா்பில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மதன்லால் திங்கரா 143-ஆவது பிறந்த தினம், பகத்சிங் 119-ஆவது பிறந்த தினம், பண்டிட் தீனத்தயாள் உபாத்தியா 110-ஆவது பிறந்த தினம், செண்பகராமன் சென்னை புனித ஜாா்ஜ் கோட்டை மீது வெடிகுண்டு வீசிய 111-ஆவது ஆண்டு வெற்றி தினம் ஆகியவை வியாழக்கிழமை கடைபிடிக்கப்பட்டன.
திண்டுக்கல் தெற்கு ரத வீதியிலுள்ள பஜனை மடம் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, சிவாஜி கணேசன் மன்றத்தின் பொறுப்பாளா் கி. சரவணன் தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினா் க. அருணகிரி முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக ஒருங்கிணைப்பாளா் நா. நவரத்தினம் கலந்து கொண்டாா். முப்பெரும் தலைவா்களின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவாஜி கணேசன் மன்றத்தின் பொறுப்பாளா் சு. வைரவேல், ஆ. நாகரத்தினப் பாண்டி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.