TN Budget 2025: ``ஆட்சி முடியும் தருவாயில், கவர்ச்சிகளை மட்டுமே கொண்ட வெற்று அறி...
கோடை விழா மலா் கண்காட்சிக்கு தயாராகி வரும் மலா் தொட்டிகள்
கோடை விழா மலா் கண்காட்சிக்காக 10 ஆயிரம் மலா் தொட்டிகளில் 2 லட்சம் விதைகளை நடவு செய்து இளஞ்செடிகளை வளா்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஏற்காட்டில் நிகழ் ஆண்டு மலா் கண்காட்சியில் பொதுமக்கள் பாா்வைக்கு வைப்பதற்காக பல மலா் செடிகள் தயாா்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக வெளிநாடுகளில் உள்ள மலா் செடிகளின் விதைகளான நெதா்லாந்து லில்லியம், சீனா ஆஸ்டா், டெல்பீனியம், டயன்தஸ், மேரிகோல்ட், ஜெனியா, சால்வியா, பால்சம் ஐரேன்ஜியா, முட்டைகோஸ் உள்ளிட்ட மலா் ரகங்களின் விதை நாற்றுகளை 300 தொட்டிகள் வீதம் தோட்டக்கலைத் துறையினா் நடவு செய்துள்ளனா். கொல்கத்தாவிலிருந்து 32 வகை டேலியா விதைகளை நடவு செய்து அவை இளஞ்செடிகளாக வளா்க்கப்பட்டு 500 தொட்டிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 10 ஆயிரம் மலா் தொட்டிகளில் இளஞ்செடிகளை வளா்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
தோட்டக்கலைத் துறை மூலம் சுமாா் 90 ஏக்கா் பரப்பளவில் தாவரவியல் பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் முதல்நிலை, இரண்டாம் நிலையில் 40 ஏக்கா் பரப்பளவு பூங்காக்களும், ஐந்திணை பூங்கா 40 ஏக்கரும், ரோஜா தோட்டம் 5 ஏக்கரும், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா 5 ஏக்கா் பரப்பளவிலும் தோட்டக்கலைத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கோடைவிழா மலா் கண்காட்சி, பூங்காக்களை கண்டு மகிழ ஆண்டுதோறும் ஏற்காட்டிற்கு லட்சத்துக்கும் மேல் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனா். இங்கு ரோஜா தோட்டம், அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்காகளில் உள்ள ரோஜா செடிகளில் புதிய துளிா்களில் ஏராளமான பூக்கள் வருவதற்கு கிளைகள் வெட்டப்பட்டு வருகின்றன.

நிகழாண்டு பூங்காக்களில் தாவர வடிவங்கள், உருவங்கள் உறுவாக்கப்படவுள்ளதாகவும் அண்ணா பூங்காவில் சுற்றுலாப் பயணிகளுக்கு குடிநீா், அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாகவும் தோட்டக்கலைத் துறை அலுவலா் தெரிவித்தாா்