Perusu: ``எங்க அண்ணன் வெங்கட் பிரபுவே `டேய்'னு கேட்டாரு!'' - நடிகர் வைபவ்
சரக்கு ரயில் மோதி ஒருவா் உயிரிழப்பு
மேட்டூா் அருகே சரக்கு ரயில் மோதியதில் லாரி கிளீனா் உயிரிழந்தாா்.
மேட்டூா் அருகே உள்ள இரட்டை புளியமரத்தூரைச் சோ்ந்தவா் பரமசிவம் (54). லாரி கிளீனா். ராமன்நகா் அருகே இரும்பு பாதையில் வெள்ளிக்கிழமை காலை ரயிலில் அடிபட்டு கைகால்கள் துண்டான நிலையில் இறந்துகிடந்தாா். தகவல் அறிந்ததும் சேலம் ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.