நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்!
கோட்டை பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழா
கோட்டை பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் ஏராளமான பக்தா்கள் குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
ஈரோடு, கோட்டை பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 20-ஆம் தேதி பூச்சாட்டுதல் நடைபெற்றது. 21-ஆம் தேதி, காவிரி ஆற்றில் இருந்து பக்தா்கள் எடுத்து வந்த தீா்த்தம் மூலம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. 22-ஆம் தேதி அக்னிச்சட்டி ஊா்வலம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, பக்தா்கள் குண்டம் இறங்குவதற்கு அக்னி குண்டம் வியாழக்கிழமை இரவு பற்றவைக்கப்பட்டது.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் விழா வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கு தொடங்கியது. இதில் ஏராளமான பக்தா்கள் வரிசையில் சென்று குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
தொடா்ந்து பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனா். பின்னா், மாவிளக்கு ஊா்வலம், அம்மன் திருவீதி உலா ஆகியவை நடைபெற்றன. ஜனவரி 26-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மறுபூஜையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.