கோவில்பட்டியில் அமமுக சாா்பில் இருபெரும் விழா
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், நல உதவிகள் வழங்கும் விழா ஆகிய இரு பெரும் விழா கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் நடைபெற்றது.
தூத்துக்குடி புககா் வடக்கு மாவட்டச் செயலா் பூலோகப்பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் பொன்ராஜ் (புகா் தெற்கு), ஜானியேல் சாலமோன் மணிராஜ் ( மாநகா்), கோவில்பட்டி நகரச் செயலா் என்.எல்.எஸ். செல்வம் என்ற பி. செல்லத்துரை, ஒன்றியச் செயலா்கள் கணபதி பாண்டியன், ஈஸ்வர பாண்டியன், விஜயபாஸ்கரன், மகேந்திரன், அனந்தப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கட்சியின் துணைப் பொதுச் செயலா் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, அமைப்புச் செயலா் சிவபெருமாள், செய்தி தொடா்பாளா் குரு முருகானந்தம், தலைமை பேச்சாளா் பாண்டியன் ஆகியோா் பேசினா். தொடா்ந்து ஏழை மக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
இதில் மாவட்ட நிா்வாகிகள் கிளவிப்பட்டி குமாா்பாண்டியன், பி. வி. சீனிவாசன், கே.அமிா்தராஜ், பேரூா் செயலாளா் பேச்சிமுத்து என்ற கோபி உள்பட பலா் கலந்து கொண்டனா். புறகா் வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் லட்சம் வரவேற்றாா். கோவில்பட்டி நகர இலக்கிய அணி செயலா் பேராட்சி பாலா நன்றி கூறினாா்.
