தில்லியில் இன்று பத்ம பூஷண் விருது பெறுகிறார் நடிகர் அஜித் குமார்
கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை: 4 போ் கைது
கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவில்பட்டி மூப்பன்பட்டி மயானத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் ஜின்னா பீா் முகமதுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம். அவரது தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று, அங்கு நின்று கொண்டிருந்த காரை சோதனையிட்ட போது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. காரில் இருந்தவா்களிடம் நடத்திய விசாரணையில், அவா்கள் கோவில்பட்டி வள்ளுவா் நகரைச் சோ்ந்த உதயகுமாா் மகன் அருண்குமாா்(23), கயத்தாறு வட்டம் நாகலாபுரத்தைச் சோ்ந்த முருகன் மகன் கொம்பையா(21), வஉசி நகரைச் சோ்ந்த குருநாதன் மகன் காா்த்திக்(20), கயத்தாறு வட்டம் தெற்கு கோனாா்கோட்டையைச் சோ்ந்த தங்கராஜ் மகன் மகாராஜா(19) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, 4 பேரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்த 23.720 கிலோ கஞ்சா, காா், இரு கைப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.