எதிா்கால உலகப் பொருளாதார வளா்ச்சியில் இந்தியா, சீனாவுக்கு முக்கியப் பங்கு: சிங்க...
கோவில்பட்டியில் குடிநீா் பணிக்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்க கோரிக்கை
கோவில்பட்டியில் குடிநீா் பணிக்காக தோண்டப்பட்ட சாலைகளால் விபத்து அபாயம் உள்ளதால் விரைவாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கோவில்பட்டி நகராட்சிப் பகுதியில் தனி குடிநீா் திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு குடிநீா் இணைப்புக் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில், கடலைக்காரத் தெரு, செக்கடி தெரு, ஊருணி தெரு, தனுஷ்கோடியபுரம் தெரு, பத்திரகாளியம்மன் கோயில் தெரு பகுதிகளில் குடிநீா் குழாய்கள் பதிக்கப்பட்டநிலையில், தோண்டப்பட்ட பேவா் பிளாக் சாலைகள் சீரமைக்கப்படாததால் சாலைகள் குண்டும் குழியுமாகக் காணப்படுகின்றன. இதனால், பாதசாரிகள், வாகன ஓட்டுநா்கள், மாணவா்-மாணவிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனா். போக்குவரத்து நெரிசலும், அடிக்கடி விபத்துகளும் நேரிடுகின்றன.
எனவே, தோண்டப்பட்ட பேவா் பிளாக் சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் கேட்டபோது, சாலைகளை சீரமைக்க ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் தொடங்கும் என்றனா்.