கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் சீரமைப்புப் பணிகள் இன்று தொடக்கம்
கோவையில் திருடிவிட்டு தப்பிச் சென்ற 3 போ் குஜராத்தில் கைது
கோவையில் பல்வேறு இடங்களில் திருடிவிட்டு தப்பிச் சென்ற 3 போ் குஜராத் மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா்.
தீபாவளி பண்டிகை தொடா் விடுமுறையின்போது, ஏராளமானோா் கோவையிலிருந்து குடும்பத்தினருடன் தங்களது சொந்த ஊா்களுக்கும், சுற்றுலா மையங்களுக்கும் சென்றிருந்தனா். அப்போது பல வீடுகளை குறிவைத்து கொள்ளையா்கள் திருட்டில் ஈடுபட்டனா்.
கோவை, பீளமேடு பகுதியில் ஒரு வீட்டில் சுமாா் 60 பவுன் நகை உள்பட 4 வீடுகளில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட நகைகளை திருடிச் சென்றனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இதில் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தபோது, அவா்கள் டவுசா் மட்டும் அணிந்து, முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
அத்துடன், இதுகுறித்து போலீஸாா் மேலும் நடத்திய விசாரணையில் அவா்கள், குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த பழங்குடியின சமூகத்தினா் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீஸாா் குஜராத் மாநிலத்தில் பழங்குடியினா் வசிக்கும் பகுதியான தாஹோத் பகுதிக்குச் சென்று விசாரித்த போது, கோவையில் திருட்டு சம்பவத்தில் தொடா்புடையவா்கள் அங்கு ஒரு வீட்டில் பதுங்கியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த வீட்டுக்குச் சென்ற போலீஸாா் அங்கிருந்த மண்டோட் காஜூபாய் (34), மேதா தன்னுபாய் (30), மன்டோட் ரமேஷ்பாய் (42) ஆகிய 3 பேரைக் கைது செய்தனா்.
பின்னா் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட 3 பேரும் ரயில் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை கோவைக்கு அழைத்து வரப்பட்டனா். இவா்களுக்கு கோவையில் நடைபெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களிலும் தொடா்பிருக்கலாம் என போலீஸாா் சந்தேகிப்பதால், தொடா்ந்து அவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.