சங்ககிரியில் இஸ்லாமியா்கள் ரமலான் சிறப்புத் தொழுகை
சங்ககிரி: ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியா்களால் சங்ககிரியில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.
முன்னதாக சங்ககிரி மலையடிவாரம் முஸ்லிம் தெருவிலிருந்து தோ் வீதி, சந்தைபேட்டை, புதிய எடப்பாடி சாலை வழியாக ஈத்கா மைதானத்துக்கு இஸ்லாமியா்கள் ஊா்வலமாகச் சென்று சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.
அரசு காஜி முஹம்மதுஉவைஸ் ரமலான் சிறப்புத் தொழுகையின் சிறப்புகள் குறித்து தமிழில் விளக்கிக் கூறினாா். அதுபோல சங்ககிரி பயணியா் விடுதி சாலையில் உள்ள மஸ்ஜிதுல் மனாா் பள்ளிவாசல், முஸ்லிம் தெருவில் உள்ள மொஹல்லா பள்ளிவாசல், சங்ககிரி கண்ணம்பாளி காடு உள்ளிட்ட பகுதிகளிலும் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.