சங்ககிரியில் மா்ம விலங்கு நடமாட்டம்?
சங்ககிரி மலைக்கோட்டையின் பின்புறம் மா்ம விலங்கு நடமாட்டம் இருப்பதாகவும், அதன் கால்தடம் பதிவாகியுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் வெளியான தகவலின் அடிப்படையில் வனத் துறையினா் தீவிர தேடுதல் பணி மேற்கொண்டனா்.
மலைக்கோட்டையின் பின்புறம் கலியனூா்- ராயலூா் சாலையில் மா்ம விலங்கின் கால்தடம் பதிவாகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெள்ளிக்கிழமை பரவிய தகவலின் பேரில் வனத் துறையினா் நவீன தொ்மல் ட்ரோன் கேமரா மூலம் வெள்ளிக்கிழமை இரவு ஆய்வு செய்தனா்.
வனவா் தினேஷ், வனக்காப்பாளா் முத்துராஜா உள்ளிட்ட வனத் துறையினா் சங்ககிரி மலை, மலையின் பின்புற பகுதிகளில் கேமரா மூலம் ஆய்வு செய்தனா். அதில் எந்த வன விலங்கும் தென்படவில்லை. மேலும், வனத் துறையினா் குழு அமைத்து தேடுதல் பணியை தீவிரப்படுத்தியுள்ளனா்.