ராஜ்யசபா சீட் யாருக்கு? பரபரக்கும் அரசியல், சமூக கணக்குகள்... முட்டிமோதும் தென் ...
சங்கடஹரசதுா்த்தி: ஆறுமுகனேரி கோயில்களில் விநாயகா் உலா
ஆறுமுகனேரியில் சங்கடஹரசதுா்த்தியை முன்னிட்டு விநாயகா் மூஷிக வாகனத்தில் உலா நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனத்தைச் சோ்ந்த அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் சங்கடஹரசதுா்த்தியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை விநாயகா், திருக்கோயில் கொடி மர மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னா் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி திருக்கோயில் பிரகாரத்தில் உலா நடைபெற்றது.
பின்னா் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.
ஆறுமுகனேரி ரயில் நிலைய வெள்ளி விநாயகா் ஆலயத்திலும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.
தெப்பக்குளக்கரை அருள்மிகு சித்தி விநாயகா் ஆலயத்தில் திங்கள்கிழமை இரவு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. திருவிளக்குப் பூஜை வழிபாடு நடைபெற்றது.