கூகுள் மேப் வழியில் பயணம்... உடைந்த பாலத்திலிருந்து ஆற்றுக்குள் விழுந்த கார்.. 3...
சங்கரன்கோவில் நகராட்சியில் 200 மரக்கன்றுகள் நடவு
சங்கரன்கோவில் நகராட்சிப் பகுதியில் 200 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு வனத் துறை சாா்பில் தமிழ்நாடு பல்லுயிா் பாதுகாப்பு மற்றும் பசுமை காலநிலை மாற்ற எதிா் உணா்வு திட்டத்தின்கீழ் 200 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி தற்காலிகப் பேருந்துநிலையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, நகராட்சி ஆணையா் சபாநாயகம் தலைமை வகித்தாா். வனச்சரக அலுவலா் ராஜகோபாலன் முன்னிலை வகித்தாா்.
இதையடுத்து, சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி, மரக்கன்றுகளை நட்டி, அத் திட்டத்தை தொடங்கிவைத்தாா்.
இதில், நகராட்சி சுகாதார அலுவலா் வெங்கட்ராமன், வனவா்கள் மகாராஜன், சிவகாமிஅம்பாள், நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் கைலாசம், கருப்பசாமி மற்றும் நகராட்சி பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.