Doctor Vikatan: தொப்பை இல்லாத flat tummy... சாத்தியமாக வாய்ப்பே இல்லையா?
சட்ட விரோதமாக கனிமங்களை வெட்டி எடுத்தால் கடும் நடவடிக்கை
திருப்பூா் மாவட்டத்தில் சட்ட விரோதமாக கனிமங்களை வெட்டி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் எச்சரித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் அரசின் முறையான அனுமதியின்றி அரசு புறம்போக்கு மற்றும் பட்டா நிலங்களில் சட்ட விரோதமாக கனிமங்களை வெட்டி எடுப்பது மற்றும் அனுமதியின்றி வாகனங்களில் எடுத்துச் செல்வது கனிமம் மற்றும் சுரங்கம் மேம்படுத்துதல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டம், தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள் 1959-இன் படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
சட்ட விரோதமாக கனிமங்களை எடுத்துச் செல்வதைத் தடுக்கும் பொருட்டு வருவாய்த் துறை, புவியியல் மற்றும் சுரங்கத் துறை, போலீஸாா் மூலமாகவும், வட்டாட்சியா் தலைமையில் செயல்படும் வட்ட அளவிலான கண்காணிப்புக் குழு மூலமாகவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சட்ட விரோதமாக கனிமங்களை வெட்டி எடுத்துச் செல்லும் வாகனங்கள் கைப்பற்றப்படும். மேலும் சட்ட விரோதமாக கனிமங்கள் வெட்டியெடுக்கப்படும் நிலத்தின் உரிமையாளா்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபா்களின் மீதும் அபராதம் மற்றும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே பொதுமக்கள் அரசின் அனுமதியின்றி சட்ட விரோதமாக கனிமங்களை வெட்டி எடுத்துச் செல்வது தொடா்பான தகவல்களை வருவாய்த் துறை, புவியியல் மற்றும் சுரங்கத் துறை, போலீஸாா், மாவட்டம் மற்றும் வட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவிடம் புகாா் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.