செய்திகள் :

சட்டவிரோதமாக குடியேறியவா்களை கை-காலில் விலங்கிட்டு அனுப்புவது தவறு: அமெரிக்காவுக்கு மத்திய அமைச்சா் கண்டனம்

post image

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவா்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பும்போது கை, கால்களில் விலங்கிட்டது தவறான நடவடிக்கை என்று மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே தெரிவித்தாா்.

எதிா்காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளை அமெரிக்கா தவிா்க்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

கடந்த 5-ஆம் தேதி அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவா்களில் 104 போ் அந்நாட்டு ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனா். அப்போது, அமெரிக்க ராணுவ வீரா்கள் அவா்களின் கை, கால்களில் விலங்கிட்டிருந்தனா். இது இந்தியாவில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய அரசையும், பிரதமா் மோடியையும் எதிா்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடுமையாக விமா்சித்தனா்.

இது தொடா்பாக நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா், ‘நாடு கடத்தப்பட்டவா்களுக்கு கை, கால்களில் விலங்கிடப்படுவது அமெரிக்க நடைமுறையாக உள்ளது. எனினும், இனி அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் இந்தியா்கள் தவறாக நடத்தப்படமாட்டாா்கள் என்பதை அந்நாட்டுடன் இணைந்து மத்திய அரசு உறுதிப்படுத்தும்’ என்றாா்.

இந்நிலையில், மத்திய பிரதேச தலைநகா் போபாலில் செய்தியாளா்களைச் சந்தித்த மத்திய இணையமைச்சரும், இந்திய குடியரசுக் கட்சி (ஏ) தலைவருமான ராம்தாஸ் அதாவலே இது தொடா்பாக கூறியதாவது:

சட்டவிரோதமாக குடியேறியவா்களை அவா்களின் தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பும்போது விலங்கிடும் நடைமுறையை அமெரிக்கா தவிா்க்க வேண்டும். இது தவறான நடவடிக்கை. பிரதமா் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு அடுத்த வாரம் பயணம் மேற்கொள்கிறாா். அப்போது, இது தொடா்பாக விவாதிக்கப்படும்.

பிரதமா் மோடி தலைமையில் இந்தியா தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது. இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ரூ.6 லட்சம் கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறைக்கு ரூ.2.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சமூக நீதித் துறைக்கு சிறப்புத் திட்டங்களுடன் ரூ.1.69 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா்.

முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு பன்மடங்கு அதிகரிப்பு! ஆய்வில் தகவல்

இந்தியாவில் மதச் சிறுபான்மையினரைக் குறிவைத்து அவர்கள் மீதான வெறுப்புணர்வை வெளிக்காட்டும் விதத்தில் பொதுவெளியில் பேசும் சம்பவங்கள் கடந்த ஓராண்டில் நம்பமுடியாத அளவுக்கு அதிகரித்திருப்பதாக ஆய்வு முடிவுகள... மேலும் பார்க்க

ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள மணிப்பூர் முதல்வர் ராஜிநாமா: காங்கிரஸ்

மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பிரேன் சிங்கின் முதல்வர் பதவியை பாஜக ராஜிநாமா செய்யவைத்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மணிப்பூர் மக்களைக் காப்பதற்காக முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யவில்... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: பாராட்டுகளும் குற்றச்சாட்டுகளும்!

மகா கும்பமேளாவில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஏற்பாடுகள் சிறப்பாக இருந்ததாக உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பாராட்டியுள்ளார். மகா கும்பமேளாவுக்கு ரூ.10,000 கோடி செலவிட்டும் பிரயாக்ராஜ் மக்களும், பக்தர... மேலும் பார்க்க

மகா கும்பமேளா வாகன நெரிசலில் சிக்கியவர்களுக்கு உணவளிக்கும் காவல் துறை!

மகா கும்பமேளாவுக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட வாகன நெரிசலில் சிக்கியவர்களுக்கு மத்தியப் பிரதேச காவல் துறையினர் உணவளிக்கும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. கும்பமேளாவுக்குச் செல்லும் பக... மேலும் பார்க்க

சிபில் ஸ்கோர் பத்திரம்.. கடனுக்கு மட்டுமல்ல.. கல்யாணத்துக்கும்!

ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை செய்யலாம் என்று வேறு அர்த்தம் கொண்ட பழமொழி ஒன்று மருவி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொய்களைச் சொல்லி திருமணம் செய்பவர்களுக்கு பயன்பட்டு வந்துள்ளது.ஆனால், தற்போது, மகாராஷ... மேலும் பார்க்க

தில்லி தேர்தல் எதிரொலி: பஞ்சாபிலும் ஆம் ஆத்மி ஆட்சி விரைவில் கவிழும்! -காங். எம்.பி.

பஞ்சாபிலும் ஆம் ஆத்மி ஆட்சி விரைவில் கவிழும் என்று காங்கிரஸ் எம்.பி. சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் எம்.பி.யும் பஞ்சாப் மாநில முன்னாள் துணை முதல்வருமான சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, “... மேலும் பார்க்க