விக்கெட் கீப்பர் செய்த தவறினால் நோ பால்: ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை!
சத்தீஸ்கரின் மாவோயிஸ்டுகள் 2 பேர் ஜார்க்கண்டில் சரண்!
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மாவோயிஸ்டுகள் 2 பேர் ஜார்க்கண்ட் காவல் துறையினரிடம் சரணடைந்துள்ளனர்.
சத்தீஸ்கரின் பல்ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமர்ஜேத் பிர்ஜியா மற்றும் மிதிலேஷ் கொர்பா ஆகிய இரண்டு பேரும், லத்தேஹார் பகுதியில் சோட்டு கார்வார் எனும் மாவோயிஸ்டு தலைவரின் கீழ் செயல்பட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் இருவரும் ஜார்க்கண்டின் லத்தேஹர் மாவட்டத்தின் காவல் துறை உயர் அதிகாரியான குமார் கவுரவ் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை அதிகாரி யாதாராம் பன்கர் ஆகியோரின் முன்னிலையில் இன்று (ஏப்.15) சரண்டைந்துள்ளனர். மேலும், சரண்டைந்த முன்னாள் கிளர்ச்சியாளர்கள் இருவருக்கும் மலர் மாலை அணிவித்து அதிகாரிகள் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் செயல்பட்டு வரும் மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினரிடம் சரணடைய வேண்டும் என்றும் இல்லையென்றால் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு ஆளாகக்கூடும் என எச்சரித்துள்ளனர்.
முன்னதாக, தற்போது சரண்டைந்துள்ள இருவரின் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக மாவோயிஸ்டுகளுக்கு எதிராக அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளினால் அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கக் கூடும் எனக் கூறப்பட்டுகிறது.
கடந்த சில நாள்களாக சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளினால் 50-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:அயோத்தி ராமர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!