Travel: சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் சிவப்பு கடற்கரை - ஏன் நிச்சயம் பார்க்க வேண்டு...
நடத்தையில் சந்தேகம்; மகளைக் கொன்று வீட்டின் பின்புறம் புதைத்த தாய்... உபி-யில் அதிர்ச்சி!
உத்தரப்பிரதேசத்தில் ஒருவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தன் உறவினரின் 14 வயது மகளைக் காணவில்லை என அளித்த புகாரின் பேரில், நடத்தப்பட்ட விசாரணை 2025 ஏப்ரல் மாதத்தில் முடிவுக்கு வந்துள்ளது. புகாரின் அடிப்படையில் சிறுமியின் வீட்டாரை போலீஸார் விசாரித்தனர். சிறுமியின் தந்தை வெளியூரில் வேலை செய்து வந்துள்ளார். தாயுடன் மட்டுமே சிறுமி வசித்துவந்தது தெரியவந்தது. இந்நிலையில், அக்கம் பக்கத்தினரை விசாரித்ததில் அச்சிறுமியின் தாயின் மேல் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தனர்.
இதனை அடுத்து அவரது வீட்டின் பின்புறத்தில் அச்சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீஸார், சிறுமியின் தாயாரிடம் கடுமையாக விசாரித்துள்ளனர். விசாரணையில் தனது மகளின் குணாதிசயங்கள் பிடிக்காததால் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். குற்றத்தை மறைப்பதற்காக சடலத்தை வீட்டின் பின்புறத்தில் புதைத்ததாகவும் விசாரணையில் கூறினார். பிரேத பரிசோதனையிலும் சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியானது.

நீண்ட கால விசாரணைக்குப் பின்னர், 3 நீதிபதிகள் அடங்கிய தலைமை அமர்வு இவ்வழக்கில் தீர்ப்பை வழங்கியுள்ளது. 50 க்கும் மேற்பட்ட விசாரணைகள், 7 சாட்சிகளை முன்வைத்த அரசு தரப்பினர் தன் மகளின் நடத்தையில் சந்தேகப்பட்டு தாய் தான் இந்த கொலையை செய்துள்ளார் என அரசு தரப்பு வழக்கறிஞர் தன் வாதத்தை முன்வைத்தார்.
வாதங்களை கேட்டறிந்த தலைமை அமர்வு, தாய்தான் சிறுமியைக் கொன்றுள்ளார் என உறுதி செய்து, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதத்தையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.