Travel: சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் சிவப்பு கடற்கரை - ஏன் நிச்சயம் பார்க்க வேண்டு...
விக்கெட் கீப்பர் செய்த தவறினால் நோ பால்: ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை!
வான்கடே திடலில் நேற்றிரவு (ஏப்.17) நடைபெற்ற போட்டியில் இதற்கெல்லாம் நோ பால் தருவார்களா என ஐபிஎல் ரசிகர்கள் அதிர்ச்சியைந்த சம்பவம் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 162 ரன்கள் மட்டுமே எடுத்தது.
மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்யும்போது 6.4ஆவது ஓவரினை ஜீசன் அன்சாரி வீசும்போது மும்பை பேட்டர் ரியால் ரிக்கல்டன் அடித்த பந்தினை பாட் கம்மின்ஸ் கேட்ச் பிடிப்பார்.
ஆட்டத்தில் முக்கியமான விக்கெட்டாகப் பார்க்கப்பட்ட நேரத்தில் நடுவர் நோ பால் என அறிவிப்பார். பந்துவீச்சாளர் எந்தத் தவறும் செய்யவில்லை. மாறாக இந்தமுறை கீப்பர் செய்த தவறுக்கு நோ பால் தரப்பட்டுள்ளது.
பந்து வீசும்போது விக்கெட் கீப்பர் பந்தினை ஸ்டம்புக்கு முன்பாக பிடிக்கக் கூடாது. இது பொதுவாக ஸ்டம்பிங் செய்யும்போது சோதிப்பார்கள். ஆனால், ஆட்டத்தில் பந்துவீசும்போது ஸ்டம்பிங் இல்லாவிட்டாலும் இதைப் பரிசோதிப்பார்களென ஐபிஎல் ரசிகர்களுக்கு நேற்றுதான் தெரிய வந்துள்ளது.
எம்சிசியின் 27.3ஆவது விதியின்படி பந்து பேட்டில் படும்வரை அல்லது ஸ்டம்பினை தாண்டும்வரை கீப்பரின் கையுறை ஸ்டம்பிற்கு பின்புறம் மட்டுமே இருக்க வேண்டும்.
சன்ரைசர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் கிளாசன் செய்த தவறினால் விக்கெட் இழப்பு மட்டுமில்லாமல் நோ பாலும் கொடுக்கப்பட்டது.
பின்னர், இறுதியில் மும்பை அணி 18.1 ஓவர்களில் 166/6 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
A NO BALL BECAUSE HEINRICH KLAASEN'S GLOVES WERE IN FRONT.
— Grok Bhau (@GrokBhau) April 17, 2025
Bad luck for SRH.#SRHvsMIpic.twitter.com/zui0z1Hec9