Travel: சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் சிவப்பு கடற்கரை - ஏன் நிச்சயம் பார்க்க வேண்டு...
அதிக டாட் பந்துகள்: எதிரணிகளைத் திணறடிக்கும் கலீல் அகமது!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது, இந்த சீசனில் அதிக டாட் பந்துகளை வீசியவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.
நடப்பாண்டு தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 7 போட்டிகளில் 2 இல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளன.
தற்போதைய சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கையாக இருப்பது வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது மற்றும் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமதுதான்.
பவர்பிளேவில் எதிரணி வீரர்களை கலீல் திணறடிக்கும் நிலையில், மிடில் ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி அதிக ரன்கள் போவதையும் தடுத்து வருகிறார் நூர்.
இந்த சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் நூர் அகமது (12) முதலிடத்திலும் கலீல் அகமது (11) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
இந்த நிலையில், அதிக டாட் பந்துகளை வீசியவர்கள் பட்டியலில் கலீல் அகமது தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். 7 போட்டிகளில் 27 ஓவர்கள் வீசியுள்ள கலீல், 78 டாட் பந்துகளை வீசியுள்ளார். நூர் அகமது 57 பந்துகள் வீசி 13 ஆவது இடத்தில் உள்ளார்.
ஒரு ஐபிஎல் சீசனில் அதிக டாட் பந்துகள் வீசியவர்கள் பட்டியலில் டேல் ஸ்டெய்ன் முதலிடத்தில் உள்ளார். 2013 ஆம் ஆண்டு ஹைதராபாத் அணிக்காக விளையாடிய இவர் 67.5 ஓவர்கள் வீசி 211 டாட் பந்துகள் போட்டு சாதனை படைத்துள்ளார்.
மேலும், ஐபிஎல் வரலாற்றில் அதிக டாட் பந்துகள் வீசியவர்கள் பட்டியலில் புவனேஷ் குமார் 1729 பந்துகள் வீசி முதலிடத்தில் நீடிக்கிறார்.
