Travel: சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் சிவப்பு கடற்கரை - ஏன் நிச்சயம் பார்க்க வேண்டு...
பஞ்சாபுடன் பலப்பரீட்சை: பெங்களூரில் ஆர்சிபி வெல்லுமா?
சொந்த மண்ணில் தொடர்ந்து தோல்வியுறும் ஆர்சிபிக்கு இன்று (ஏப்.18) பெங்களூரில் கடும் சவால் காத்திருக்கிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு புதிய கேப்டனாக ரஜத் படிதார் தேர்வானார். இவரது தலைமையில் முதலிரண்டு போட்டிகளில் கொல்கத்தா, சென்னை, மும்பை ஆகிய அணிகளை விழ்த்தி அசத்தியது.
வெளியூர் திடலில் சிறப்பாக விளையாடும் ஆர்சிபி தனது சொந்த திடலான சின்னசாமியில் சொதப்பி வருகிறது அதன் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சீசனில் வெளியே நடைபெற்ற 4 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள ஆர்சிபி அணி, சொந்த திடலில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் தோற்றுள்ளது.
சின்னசாமி திடலில் ஆர்சிபி அணியின் 45முறை தோல்வியுற்றுள்ளது. சொந்த திடலில் இதுதான் ஒரு அணியின் பெற்ற அதிகபட்ச தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பெங்களூரில் இன்றிரவு (ஏப்.18) 7.30 மணிக்கு பஞ்சாப் கிங்ஸ் உடன் ஆர்சிபி மோதுகிறது.
சொந்த திடலில் மோசமாக விளையாடும் ஆர்சிபியின் இந்த சோகத்துக்கு இன்றாவது முற்றுப்புள்ளி பெறுமா என அதன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
புள்ளிப் பட்டியலில் ஆர்சிபி 8 புள்ளிகளுடன் 3ஆம் இடத்திலும் பஞ்சாப் கிங்ஸ் 8 புள்ளிகளுடன் 4ஆவது இடத்திலும் இருக்கின்றன.
இந்தப் போட்டியில் வெல்லும் அணி முதலிடத்துக்கு செல்லும் வாய்ப்பிருக்கிறது. அதனால், ஆர்சிபி அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
Mr. Powerplay is ready to shine and slay, in and out today! ↖️↗️#PlayBold#ನಮ್ಮRCB#IPL2025pic.twitter.com/7eKzgBbhJ9
— Royal Challengers Bengaluru (@RCBTweets) April 18, 2025