செய்திகள் :

சம்பல் மாவட்டத்துக்குச் செல்கிறார் ராகுல்!

post image

வன்முறையால் பாதிக்கப்பட்ட உத்தப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை நாளை பார்வையிடுகிறார் மக்களவையின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி.

கடந்த நவம்பர் 19ஆம் தேதி முதல் மசூதியில் ஹரிஹர் கோவில் இருப்பதாக ஒரு மனுவைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் முதன்முதலில் ஆய்வு செய்யப்பட்டபோது சம்பாலில் பதற்றம் நிலவியது. ஞாயிற்றுக்கிழமை, மசூதிக்கு அருகே ஏராளமான மக்கள் கூடி, ஆய்வுக் குழு மீண்டும் பணியைத் தொடங்கியபோது கோஷங்களை எழுப்பத் தொடங்கினர். அப்போது பாதுகாப்புப் படை வீரர்களுடன் மோதலில் ஈடுபட்ட அவர்கள், வாகனங்களை எரித்தும், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர்.

இந்த வன்முறையில் நான்கு பேர் இறந்துள்ளனர், மேலும் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் உள்பட 10.-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வன்முறை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது.

முன்னதாக இன்று காங்கிரஸ் தலைவர் சச்சின் சௌத்ரி, கட்சியின் பிரதிநிதிகள் சம்பல் மாவட்டத்துக்குச் சென்றபோது உத்தரப் பிரதேச காவல்துறை தடுத்ததாகக் குற்றம் சாட்டினார். சம்பலில் நடந்த வன்முறை சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த நிலையில், மக்களவையின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சம்பல் மாவட்டத்துக்குச் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பலுக்கு நான் மட்டும் தனியாகச் செல்லவும் தயார்.. ஆனால்: ராகுல்

எதிர்க்கட்சித் தலைவராக சம்பலுக்கு செல்வது எனது உரிமை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்ய மக்களவை எதிர்க்கட்சித... மேலும் பார்க்க

ராகுலுக்கு அனுமதி மறுப்பு: மக்களவையில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு!

உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்திற்குள் நுழைய மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து மக்களவையிலிருந்து காங்கிரஸ் காங்கிரஸ் வெளிநடப்பு செய்தனர். மேலும் பார்க்க

பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க ராகுலுக்கு உரிமை உள்ளது: பிரியங்கா காந்தி

எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்திக்கு பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க அரசியல் சாசன உரிமை உள்ளது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள மசூத... மேலும் பார்க்க

மக்களே எச்சரிக்கை! அதிக ஆபத்து நிறைந்த உணவாக வகைப்படுத்தப்படும் பாட்டில் குடிநீர்!

இந்தியாவில் பாட்டில் குடிநீர் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் அதிக ஆபத்து நிறைந்த உணவாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.ஒரு காலத்தில், பரவலாகப் பயன்படுத்தப்ப... மேலும் பார்க்க

ஜெகந்நாதர் கோயிலில் குடியரசுத் தலைவர் முர்மு வழிபாடு!

ஒடிஸாவில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலுக்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாலை மார்க்கமாக சுமார் 1 கி.மீ நடந்துவந்து சுவாமி தரிசனம் செய்தார். குடியரசுத் தலைவர் சாதாரண பக்தரைப்போன்று கிரண்ட... மேலும் பார்க்க

சம்பல் விவகாரத்தில் எதை மறைக்க முயல்கிறது பாஜக? அகிலேஷ்

சம்பல் வன்முறை நடந்த பகுதிக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்களை செல்ல விடாமல் தடுத்து நிறுத்தப்படுவதற்கு சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.உத்தரப் பிரதேச மாநிலம், சம்பலில் நடந்த வன்முறை... மேலும் பார்க்க