செய்திகள் :

சல்மானுக்கு மீண்டும் மிரட்டல்; சித்திக் கொலையாளிகளுக்கு ரூ.25 லட்சம், கார், வீடு... வெளியான தகவல்!

post image

மும்பையில் கடந்த மாதம் தேசியவாத காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலையில் குஜராத் சிறையில் இருக்கும் மாஃபியா கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இக்கொலை தொடர்பாக இதுவரை 18 பேரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். குஜராத் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோயை தங்களது காவலில் எடுத்து விசாரிக்க மும்பை போலீஸார் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு இதுவரை மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி கொடுக்காமல் இருக்கிறது. பாபா சித்திக் கொலை தொடர்பாக புனேயில் ஆதித்யா மற்றும் ரபீக் ஆகிய இரண்டு பேரை இரண்டு நாள்களுக்கு முன்பு போலீஸார் கைது செய்துள்ளனர். இருவரும் புனே அருகே துப்பாக்கியை கையாள பயிற்சி எடுத்தது அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சல்மான் கான்

போலீஸாரின் விசாரணையில் பாபா சித்திக்கை கொலைசெய்ய பயன்படுத்த வாங்கப்பட்ட 5 துப்பாக்கிகள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீஸார் நடத்திய விசாரணையில் ஏற்கெனவே இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ருபேஷ், சிவம், கெளரவ் மற்றும் கரண் ஆகியோருக்கு தலா ரூ.25 லட்சம் பணம், ஒரு கார், ஒரு வீடு மற்றும் துபாயிக்கு சுற்றுலா சென்று வர விமான டிக்கெட் கொடுப்பதாக ஆசை வார்த்தைகள் கூறப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த மாதம் புனேயில் கைது செய்யப்பட்ட ராம்பூல்சந்த் பஞ்சாப் மாநிலம், ஜலந்தரை சேர்ந்த சீசான் அக்தர் என்பவரிடம் பணம் வாங்கி இருக்கிறார். அதனை ருபேஷ், சிவம், கெளரவ், கரண் ஆகியோருக்கு தலா ரூ.25 லட்சம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். சீசான் அக்தர்தான் ஏற்கெனவே பாபா சித்திக்கை கொலை செய்தவர்களுக்கு 4 லட்சம் பணம் அனுப்பி இருந்தார். அதோடு லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகளின் 10 வங்கிக் கணக்கை தனது கட்டுப்பாட்டில் வைத்து ஆப்ரேட் செய்து வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்

நடிகர் சல்மான் கானுக்கு 10 நாள்களில் 4வது முறையாக கொலை மிரட்டல் வந்துள்ளது. சல்மான் கான் படத்தில் வரக்கூடிய பாடல் ஒன்றில் லாரன்ஸ் பிஷ்னோய் பெயர் வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இக்கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அப்பாடலை எழுதிய நபருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் அது போன்ற பாடலை எழுத முடியாது என்றும், சல்மான் கானுக்கு துணிச்சல் இருந்தால் அதனை தடுத்து பார்க்கட்டும் என்றும் மர்ம நபர் அனுப்பி இருக்கும் கொலை மிரட்டலில் குறிப்பிட்டுள்ளார். இப்போதும் மும்பை டிராபிக் போலீஸ் வாட்ஸ்அப் நம்பருக்குத்தான் கொலை மிரட்டல் வந்திருக்கிறது. கடந்த 10 நாட்களில் 4வது முறையாக சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. அது குறித்து மும்பை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மகன் திருமணத்துக்கு சென்றபோது திடீர் மாரடைப்பு - கோவை செல்வராஜ் மரணம்

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். காங்கிரஸ், அதிமுக, திமுக கட்சிகளில் ஆக்டிவாக வலம் வந்தவர். கடைசியாக திமுகவில் இணைந்து செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து வந்தார். இவர்1991-96 காலகட்டத்தில் கோவை... மேலும் பார்க்க

UP: யூடியூப் பார்த்து 10 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில், 500 ரூபாய் கள்ள நோட்டு அச்சடித்த இருவர் கைது..!

உத்திரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சதீஷ் ராய், பிரமோத் மிஸ்ரா. இருவரும் மிர்சாபூரின் சந்தையில் ரூ.500 கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்றபோது காவல்துறையால் கைது செய்யப்பட்டனர... மேலும் பார்க்க

மேகாலயா டு கோவை; தபால் மூலம் கடத்தப்பட்ட போதைப் பொருள்கள்; வெளியான அதிர்ச்சி பின்னணி

கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று (நவம்பர் 8) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கல்லூரி மாணவர்களிடம் போதைப் பொருள் பழக்கம் அதிகரித்து வருவதாகத் தகவல் கிடைத்தது. அதனட... மேலும் பார்க்க

சல்மான் கானுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு... கொலை மிரட்டல் ஏன்? - கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்!

ரூ.5 கோடி கேட்டு கொலை மிரட்டல்..பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. இதனால் சல்மான் கான் எப்போதும் பலத்த பாதுகாப்புடனே வெளியில் செல்லவேண்டிய நிலைக்குத் தள... மேலும் பார்க்க

`ஸ்கேன் எடுக்கணும்; செயினை கழற்றுங்க' - நோயாளியிடம் மருத்துவமனையில் நடந்த துணிகர கொள்ளை!

சென்னை ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மணி (59). இவரின் மனைவி அருணா (55). இவருக்கு உடல் நலம் சரியில்லாததால் அந்தப் பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்க்க... மேலும் பார்க்க

சேலம்: காரில் சென்றவரை வழிமறித்து கொலை செய்த கும்பல்; பழிக்குப் பழி சம்பவமா என போலீஸ் விசாரணை

சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள வெள்ளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த சரவணன் (32) என்ற வாலிபர் பீரோ பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று (நவம்பர் 8) வழக்கம்போல் தனது பட்டறைக்கு கார் மூலமாகச... மேலும் பார்க்க