செய்திகள் :

`சாணம் மட்டுமல்ல... மாட்டு தோல் மற்றும் எலும்புகளையும் பயன்படுத்த வேண்டும்' - அமித் ஷா வலியுறுத்தல்

post image

மக்கள் கிராமங்களில் இருந்து வெளியேறி நகரங்களுக்கு செல்லாமல் தடுக்கும் ஒரே வழி, பால் துறையை சிறப்பாக பராமரிப்பது மட்டும்தான் எனப் பேசியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. இந்த துறையில் பொருளாதார சுழற்சியில் சாணத்தை விற்பனைப் பொருளாக்குவதுடன் நின்றுவிடக் கூடாது என்றும்... மாட்டின் தோல் மற்றும் எலும்புகளையும் பயன்படுத்த வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

மாட்டுப் பண்ணை

கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையால் நடத்தப்பட்ட 'பால்துறையின் நிலைத்தன்மை மற்றும் சுழற்சி' என்ற பயிற்சிப் பட்டறையைத் தொடங்கி வைத்த அமித் ஷா, 'தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம்' மாட்டின் தோல் மற்றும் எலும்பை விற்பனைப் பொருளாக்குவதற்கான சிறிய கூட்டுறவுகளை ஒழுங்கமைக்கும் சாத்தியக்கூறுகளைத் ஆய்வு செய்ய வேண்டுமென்று அறிவுறுத்தினார்.

Amit Shah பேச்சு

அமித் ஷா மாட்டின் தோலை சிறிய கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பதப்படுத்தி, ஷூ தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யலாம் எனவும் இது, பண்ணை வைத்திருப்பவர்களுக்கு லாபகரமானதாக இருக்கும் எனவும் பேசியுள்ளார். மேலும் மாடு வளர்ப்பில் 100% பொருளாதார சுழற்சியை கூட்டுறவு நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அமித் ஷா

மாட்டு சாணத்தை இயற்கை எரிவாயுவாக மாற்றும் செயல்பாட்டில் தனியார் பண்ணைகளுக்கு கூட்டுறவு நிறுவனங்கள் உதவ வேண்டும் என்றும், பால்துறைக்கு தேவையான அனைத்து இயந்திரங்களையும் கூட்டுறவு நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்றும், சர்வதேச ஏற்றுமதிக்கு வழிவகுக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

அமித் ஷா, "இப்போது பண்ணை முதல் தொழிற்சாலை வரை அத்தனையையும் கிராமங்களிலேயே அமைப்பதற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். விளிம்பில் உள்ள விவசாயிகளைத் தூக்கிவிடுவதற்கு கிராமத்தில் இருந்து உலக அரங்குக்கு செல்வதற்கான வரைபடத்தை உருவாக்க வேண்டும். மதிப்புக் கூட்டுவதற்காக பண்ணையில் இருந்து தொழிற்சாலைக்கு விரிவான வரைபடத்தை உருவாக்க வேண்டும். கூட்டு முயற்சிகள் மூலம் கால்நடை வளர்ப்பவர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்." எனக் கூறியுள்ளார்.

"உயர்கல்வித் துறையின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை ஆளுநர்தான்" - அமைச்சர் கோ.வி.செழியன் தாக்கு

ஈரோட்டில் உள்ள சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி, உயர்கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் தலைமையிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, செய்தியாளர்க... மேலும் பார்க்க

BJP-யிடம் அந்தர்பல்டி அடித்த EPS? கைகொடுத்த Anbumani! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,அனைத்து கட்சி கூட்டத்தில், தென்னிந்தியளவில் ஒரு கூட்டுக்குழுவை உருவாக்கியுள்ளார் ஸ்டாலின். இதை சக்சஸாக பார்க்கிறார். இன்னொரு பக்கம் பாஜகவுடன் நெருங்கும் எடப்பாடி. பின்னணியில்... மேலும் பார்க்க

ஆதரித்த ADMK - Absent ஆன 3 கட்சிகள் - அனைத்து கட்சி கூட்டம் Highlights | Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* Delimitation: அனைத்து கட்சி கூட்டத்தில் நடந்தது என்ன?* தமிழக அரசின் கடன் 10 லட்சம் கோடி - பாமக அறிக்கையில் சொல்லப்பட்டது என்ன?* பகுதி நேர கலைப்பாட மாற்றுத்திறனாளி ஆசிரி... மேலும் பார்க்க

பிஜு பட்நாயக்: விமானத்தில் சென்று இந்தோனேசிய பிரதமரை மீட்டு வந்த முதல்வர்; மாளிகைகளை மறுத்த மனிதர்!

பின்னர் டெல்லியில் 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் இந்தோனேசியத் தூதரகம் ஒரு கண்காட்சியை ஏற்பாடு செய்தது. அதில் ஒடிசா முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக்கின் நின... மேலும் பார்க்க

பிஜு பட்நாயக்: உயரம் கருதி அல்ல, உன்னதம் கருதி... `உயர்ந்த மனிதன்’ | `The Tall Man - Biju Patnaik'

இன்று ஒடிசா முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக் பிறந்தநாள். ஆனந்த விகடனில் வெளியான 'தமிழ் நெடுஞ்சாலை' தொடரில் அவர் பற்றி ஒடிசா முதல்வரின் முதன்மை ஆலோசகராக இருந்த, ஒய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ண... மேலும் பார்க்க