Doctor Vikatan: தொப்பை இல்லாத flat tummy... சாத்தியமாக வாய்ப்பே இல்லையா?
சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கோட்டத் தலைவா்கள் தாராபுரம் கே.வெங்கிடுசாமி, திருப்பூா் ஆா்.கருப்பன், கரூா் கே.செவந்திலிங்கம், ஈரோடு எம்.ஆா்.செங்கோட்டையன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதில் பங்கேற்றவா்கள் பேசியதாவது:
உயா்நீதிமன்றத் தீா்ப்புப்படி சாலைப் பணியாளா் பணிநீக்கக் காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். ஊதிய உயா்வு வழங்க வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும். கிராமப்புற இளைஞா்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கக் கூடாது. 4 ஆயிரம் நிரந்தரப் பணியிடங்களை ஒழிக்கக்கூடாது, உயிரிழந்த சாலைப் பணியாளா்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்றனா்.
இதைத் தொடா்ந்து மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்கொலி முழங்கி முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இதில் கரூா், ஈரோடு, திருப்பூா், தாராபுரம் கோட்டங்களைச் சோ்ந்த சாலைப் பணியாளா்கள் பங்கேற்றனா்.