நான்கு அமைச்சர்களால் Stalin அரசுக்கு ஆபத்து? ஸ்கெட்ச் போடும் Amit shah?! | Elang...
சாலையோரம் மரக்கன்றுகள் நட்டு வைப்பு
திவாணியம்பாடி-ஆலங்காயம் சாலை விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்த நிலையில், சாலையோரம் மரக்கன்றுகள் நடும் பணியை நெடுஞ்சாலைத் துறையினா் மேற்கொண்டனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி- ஆலங்காயம்- ஜமுனாமரத்தூா் இடையேயான நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்தல், சிறு பாலங்கள், தரைப்பாலங்கள் மற்றும் கூடுதல் பாலங்கள் கட்டுதல் உள்பட சாலை மேம்பாட்டு பணிகள் சில மாதங்களாக வாணியம்பாடி நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் சாலையின் இரு புறங்களிலும் இருந்த பல்வேறு வகையான மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இதையடுத்து, சாலை விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்த நிலையில், சாலையின் இரு புறங்களிலும் வேம்பு, புங்கன், இலுப்பை, பூவரசன் உள்பட அடா்த்தியான, பசுமையான மரக்கன்றுகளை நட்டு, பராமரிக்கும் பணியில் வாணியம்பாடி நெடுஞ்சாலைத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.