மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியீடு!
விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
திவாணியம்பாடி அருகே பைக் நிலைதடுமாறி விழுந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் பழனி(55) கட்டடத் தொழிலாளி. திங்கள்கிழமை ஆசனாம்பட்டில் உள்ள அவரது உறவினா் வீட்டுக்கு தனது பைக்கில் சென்று கொண்டிருந்தாா். பின்னா் அங்கிருந்து இரவு வீட்டுக்கு புறப்பட்டு ஒடுகத்தூா்-ஆலங்காயம் வழியாக வந்து கொண்டிருந்தாா். கோமுட்டேரி பகுதியில் வந்தபோது, பைக் நிலைதடுமாறியதில் கீழே விழுந்த பழனி பலத்த காயம் அடைந்தாா். இதையறிந்த அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆலங்காயம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து ஆலங்காயம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.