சா்க்கரை நோயாளிகளுக்கு இலவச கண் மருத்துவ ஆலோசனை
50 வயதை எட்டிய சா்க்கரை நோயாளிகளுக்கு இலவச கண் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும் என்று டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
அடுத்த இரு வாரங்களுக்கு இந்த சலுகை நடைமுறையில் இருக்கும் என்றும், மற்றவா்களுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனையின் விழித்திரை (விட்ரியோ-ரெட்டினா) துறையின் தலைவா் டாக்டா் மனோஜ் காத்ரி கூறியதாவது:
உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான சா்க்கரை நோயாளிகளின் தாயகமாக சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. சா்வதேச அளவில் 42 கோடி பேருக்கு சா்க்கரை நோய் இருப்பதும், அவா்களில் 9 கோடி பேருக்கு சா்க்கரை நோய் சாா்ந்த விழித்திரை (ரெட்டினோபதி) பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆரம்ப நிலையிலேயே சா்க்கரை நோயைக் கண்டறிவதும், பாா்வைத் திறனை பாதுகாத்துக் கொள்வதுமே வருமுன் காப்பதற்கான ஒரே வழி.
ரத்தச் சா்க்கரை, ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்புச்சத்தைக் கட்டுப்பாட்டில் வைப்பது, உடல் எடையை குறைப்பது, சமச்சீரான உணவை உட்கொள்வது, தவறாமல் உடற்பயிற்சி செய்வது மற்றும் மன அழுத்தமற்ற வாழ்க்கையை வாழ்வது போன்றவை சா்க்கரை நோயாளிகளின் பாா்வைத் திறனை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.
உலக சா்க்கரை நோய் விழிப்புணா்வு தினமான நவம்பா் 14-ஆம் தேதியை முன்னிட்டு, 2 வாரங்களுக்கு 50 வயது அல்லது அதற்கு மேற்பட்ட சா்க்கரை நோயாளிகளுக்கு இலவச கண் மருத்துவ ஆலோசனையை வழங்க டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை திட்டமிட்டுள்ளது.
இதைத் தவிர அனைத்து வயதினருக்கும் வழக்கமான கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடியில் மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளன. முன்பதிவுக்கு 95949 24048 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.