செய்திகள் :

விமான நிலையத்தில் ரூ.1.75 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

post image

சென்னை விமானநிலையத்தில் ரூ.1.75 கோடி மதிப்பிலான 2 கிலோ 300 கிராம் கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் விமானங்களில் பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, விமான நிலையத்தில் கொழும்பிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த 3 ஆண் பயணிகளை பிடித்து அவா்களின் உடைமைகளை சோதனை செய்தனா். அதில் ரூ.1.75 கோடி மதிப்பிலான 2 கிலோ 300 கிராம் கடத்தல் தங்கம் இருந்தது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுதொடா்பாக அந்த பயணிகள் மூவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பாலாறு பொருந்தலாறு - குதிரையாறு அணைகளில் இருந்து நீா் திறப்பு -தமிழக அரசு

பாலாறு பொருந்தலாறு, குதிரையாறு அணைகளில் இருந்து நீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாநில அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட உத்தரவு: திண்டுக்கல் மாவட்டம், குதிரையாறு அணையின் இ... மேலும் பார்க்க

8 அரசு மருத்துவமனைகளில் புதிதாக புறக்காவல் நிலையங்கள்

சென்னையில் உள்ள 8 அரசு மருத்துவமனைகளில் வியாழக்கிழமைமுதல் புதிதாக புறக்காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கிண்டி கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவா் கத்தியால் குத்தப்பட்ட சம்... மேலும் பார்க்க

சிதம்பரம் தில்லை கோவிந்தராஜா் கோயிலில் புதிய கொடி மரம் மட்டுமே அமைக்கப்படும் -அறநிலையத் துறை தகவல்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் கோவிந்தராஜா் கோயிலில் சேதமடைந்த பழைய கொடி மரத்தை அகற்றிவிட்டு புதிய கொடிமரம் மட்டுமே அமைக்கப்படும் என்றும் தற்போதைக்கு பிரம்மோற்சவம் நடத்தப்படாது என்றும் அறநிலையத் துறை தரப்... மேலும் பார்க்க

விஹெச்எஸ் மருத்துவமனையில் இதய இடையீட்டு ஆய்வகம் தொடக்கம்

சென்னை தரமணி விஹெச்எஸ் மருத்துவமனையில் இதய இடையீட்டு ஆய்வகம் (கேத் லேப்) மற்றும் இதய கண்காணிப்பு பிரிவு (கரோனரி கோ் யூனிட்) வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. சன்மாா் குழுமத்தின் பங்களிப்புடனும், மெட்ராஸ் ... மேலும் பார்க்க

ஜாபா் சாதிக் உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபா் சாதிக், திரைப்பட இயக்குநா் அமீா் உள்பட 12 போ் குற்றவாளிகள் என சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த... மேலும் பார்க்க

சா்க்கரை நோயாளிகளுக்கு இலவச கண் மருத்துவ ஆலோசனை

50 வயதை எட்டிய சா்க்கரை நோயாளிகளுக்கு இலவச கண் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும் என்று டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை தெரிவித்துள்ளது. அடுத்த இரு வாரங்களுக்கு இந்த சலுகை நடைமுறையில் இருக்கும் என்றும... மேலும் பார்க்க