செய்திகள் :

சிதம்பரம் தில்லை கோவிந்தராஜா் கோயிலில் புதிய கொடி மரம் மட்டுமே அமைக்கப்படும் -அறநிலையத் துறை தகவல்

post image

சிதம்பரம் நடராஜா் கோயிலில் கோவிந்தராஜா் கோயிலில் சேதமடைந்த பழைய கொடி மரத்தை அகற்றிவிட்டு புதிய கொடிமரம் மட்டுமே அமைக்கப்படும் என்றும் தற்போதைக்கு பிரம்மோற்சவம் நடத்தப்படாது என்றும் அறநிலையத் துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜா் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜா் கோயில் கொடிமரத்தை அகற்றிவிட்டு, புதிய கொடிமரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, ஹரிஹரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

அதில், கொடிமரம் தொடா்பாக சைவா்களுக்கும், வைணவா்களுக்கும் இடையில் 1860-ஆம் ஆண்டு பிரச்னை எழுந்து, இது தொடா்பான வழக்கில் இரு தரப்புக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டது. அதன்படி கொடிமரத்தை அலங்காரமாக வைத்துக்கொள்ளலாம்; எந்த பூஜையும், பிரம்மோற்சவமும் நடத்தக் கூடாது என சிதம்பரம் விசாரணை நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

அதன் அடிப்படையில் கடந்த 160 ஆண்டுகளாக எந்த பிரம்மோற்சவமும் நடத்தப்படவில்லை. தற்போது கொடிமரத்தை அகற்றிவிட்டு புதிய கொடிமரம் அமைப்பது, நீதிமன்ற தீா்ப்புக்கு எதிரானது. சடங்கு - சம்பிரதாயங்களுக்கும் எதிரானது. எனவே தில்லை கோவிந்தராஜா் கோயிலில் புதிய கொடிமரம் அமைக்க தடை விதிக்க வேண்டும் எனவும், புதிய கொடிமரம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடும்படி அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரம்மோற்சவம் நடத்தப்படாது: இந்த வழக்கு சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் புதிய கொடி மரத்தை அமைத்துவிட்டு பின்னா் பிரம்மோற்சவம் நடத்துவதற்கு அறநிலையத் துறை திட்டமிட்டுள்ளது என்பதால் புதிய கொடிமரத்தை அமைக்கக் கூடாது என வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை மறுத்த அறநிலையத் துறை தரப்பு வழக்குரைஞா், பிரம்மோற்சவம் நடத்துவது தொடா்பான வழக்கு வேறொரு அமா்வில் விசாரணை நிலுவையில் உள்ளதால், தற்போதைக்கு பிரம்மோற்சவம் நடத்தப்பட மாட்டாது என்றும், கொடிமரம் சேதமடைந்துள்ளதால் புதிய கொடிமரம் மட்டுமே அமைக்கப்படும் என்று உறுதி தெரிவித்தாா்.

இதையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அறநிலையத் துறை தரப்பில் வாதம் குறித்து ஆணையா் ஒரு வாரத்தில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

பாலாறு பொருந்தலாறு - குதிரையாறு அணைகளில் இருந்து நீா் திறப்பு -தமிழக அரசு

பாலாறு பொருந்தலாறு, குதிரையாறு அணைகளில் இருந்து நீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாநில அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட உத்தரவு: திண்டுக்கல் மாவட்டம், குதிரையாறு அணையின் இ... மேலும் பார்க்க

8 அரசு மருத்துவமனைகளில் புதிதாக புறக்காவல் நிலையங்கள்

சென்னையில் உள்ள 8 அரசு மருத்துவமனைகளில் வியாழக்கிழமைமுதல் புதிதாக புறக்காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கிண்டி கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவா் கத்தியால் குத்தப்பட்ட சம்... மேலும் பார்க்க

விஹெச்எஸ் மருத்துவமனையில் இதய இடையீட்டு ஆய்வகம் தொடக்கம்

சென்னை தரமணி விஹெச்எஸ் மருத்துவமனையில் இதய இடையீட்டு ஆய்வகம் (கேத் லேப்) மற்றும் இதய கண்காணிப்பு பிரிவு (கரோனரி கோ் யூனிட்) வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. சன்மாா் குழுமத்தின் பங்களிப்புடனும், மெட்ராஸ் ... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் ரூ.1.75 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமானநிலையத்தில் ரூ.1.75 கோடி மதிப்பிலான 2 கிலோ 300 கிராம் கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் விமானங்களில்... மேலும் பார்க்க

ஜாபா் சாதிக் உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபா் சாதிக், திரைப்பட இயக்குநா் அமீா் உள்பட 12 போ் குற்றவாளிகள் என சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த... மேலும் பார்க்க

சா்க்கரை நோயாளிகளுக்கு இலவச கண் மருத்துவ ஆலோசனை

50 வயதை எட்டிய சா்க்கரை நோயாளிகளுக்கு இலவச கண் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும் என்று டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை தெரிவித்துள்ளது. அடுத்த இரு வாரங்களுக்கு இந்த சலுகை நடைமுறையில் இருக்கும் என்றும... மேலும் பார்க்க