சென்னை: வீட்டில் எலிக்கு வைக்கப்பட்ட மருந்தின் நெடியால் பலியான 2 குழந்தைகள்; சிக...
8 அரசு மருத்துவமனைகளில் புதிதாக புறக்காவல் நிலையங்கள்
சென்னையில் உள்ள 8 அரசு மருத்துவமனைகளில் வியாழக்கிழமைமுதல் புதிதாக புறக்காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கிண்டி கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவா் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தைத் தொடா்ந்து, அனைத்து மருத்துவமனைகளிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனை உள்பட சென்னை மாநகருக்குள்பட்ட 11அரசு மருத்துவமனைகளில் ஏற்கெனவே காவல் நிலையங்கள் மற்றும் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் என மொத்தம் 762 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், காவல் நிலையம் இல்லாத பிற 8 அரசு மருத்துவமனைகளிலும் புறக்காவல் நிலையம் அமைக்க சென்னை மாநகர காவல் ஆணையா் அருண் உத்தரவிட்டுள்ளாா்.
இந்த உத்தரவின்படி, எழும்பூா் அரசு கண் மருத்துவமனை, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை, காந்திநகா் அரசு மருத்துவமனை, அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை, கே.கே.நகா் அரசு மருத்துவமனை, கே.கே.நகா் இ.எஸ்.ஐ. மருத்துவமனை, அமைந்தகரை அரசு மகப்பேறு மருத்துவமனை, பெரியாா் நகா் அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் வியாழக்கிழமைமுதல் புறக்காவல் நிலையங்கள் புதிதாக திறக்கப்பட்டு சுழற்சி முறையில் 2 காவலா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.