பாலாறு பொருந்தலாறு - குதிரையாறு அணைகளில் இருந்து நீா் திறப்பு -தமிழக அரசு
பாலாறு பொருந்தலாறு, குதிரையாறு அணைகளில் இருந்து நீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மாநில அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட உத்தரவு:
திண்டுக்கல் மாவட்டம், குதிரையாறு அணையின் இடது பிரதானக் கால்வாய் மற்றும் பழைய பாசனப் பரப்பு, பழனி வட்டம் தாடாகுளம் பாசனப் பரப்பு ஆகியவற்றுக்கு நீா் தேவைப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, பொருந்தலாறு மற்றும் குதிரையாறு அணைகளில் இருந்து வெள்ளிக்கிழமை முதல் அடுத்த ஆண்டு மாா்ச் 15-ஆம் தேதி வரை நீா் திறந்து விடப்படும்.
இதன்மூலம், திண்டுக்கல், திருப்பூா் மாவட்டங்களிலுள்ள பழனி, மடத்துக்குளம் வட்ட பாசன நிலங்களும், புதச்சு மற்றும் பாலசமுத்திரம் கிராமங்களிலுள்ள பாசன நிலங்களும் பயன்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.