செய்திகள் :

சிசிடிவி கேமரா முன்பே ரூ.1.5 லட்சம் லஞ்சம் - சிக்கிய கோவை இந்து சமய அறநிலையத்துறை பெண் அதிகாரி!

post image

கோவை மாவட்டம், சூலூர் அருகே பாப்பம்பட்டி கிராமத்தில் தனியார் பராமரிப்பில் ஒரு கோயில் உள்ளது. அந்தக் கோயிலுக்கு ரூ.40 லட்சம் ஆண்டு வருமானமாக வருகிறது. ஆனால், கோயிலில் முறையான நிர்வாகம் இல்லை என்று புகார் எழுந்தது.

கோவை

எனவே அந்தக் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இணைக்க வேண்டும் என்று கோயில் நிர்வாகி சுரேஷ்குமார் என்பவர் இந்து சமய அறநிலையத்துறைக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவின் மீதான விசாரணையில், 12 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றம் உத்தரவிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து சுரேஷ்குமார் கேட்டதற்கு,

லஞ்சம்
லஞ்சம்

“உங்கள் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையில் இணைக்க ரூ.3 லட்சம் லஞ்சம் தர வேண்டும்.” என்று உதவி ஆணையர் இந்திரா கேட்டுள்ளார். அதற்கு சுரேஷ் மறுக்கவே, “ரூ.1.5 லட்சம் பணமாவது லஞ்சமாக கொடுக்க வேண்டும்.” என்று இந்திரா கறாராக தெரிவித்துவிட்டார்.

இதுதொடர்பாக சுரேஷ் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார். அவர்கள் அறிவுறுத்தல்படி, சுரேஷ் நேற்று இரவு இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் வைத்து இந்திராவிடம் ரூ.1.5 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் இந்திராவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

கைது
கைது

இந்திரா லஞ்சம் வாங்கியது அங்குள்ள சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது. அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

'15 ஆண்டுகள்; 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கொலை...' - கர்நாடகா தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் வழக்கு

'2003-ம் ஆண்டு, எனது மகள் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலில் காணாமல் போனார். அக்கம் பக்கத்தில் விசாரித்ததில், என்னுடைய மகள் அடையாளம் கொண்ட பெண்ணை கோயில் ஊழியர்கள் தூக்கி சென்றதாக கூறினார்கள். இதை கோயில் நி... மேலும் பார்க்க

சென்னை: `போலீஸ்னு எனத் தெரியாம தப்பு பண்ணிட்டோம்’ - காவலர் கொடுத்த புகாரில் இளைஞர்கள் கைது

சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் மாரியப்பன். இவர் கடந்த 16.07.2025-ம் தேதி இரவு, அண்ணாநகர் கிழக்கு, 1வது அவென்யூ பகுதியில் உள்ள மதுபான கடை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

சென்னை: கழிவறைக்குச் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை - டிரைவர் கைதான பின்னணி

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதாகும் பெண் ஒருவர், சென்னை, மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் கார்டனில் குடும்பத்துடன் தங்கியிருக்கிறார். இவரின் கணவர் அந்தக் கார்டனில் வேலை செய்து வருகிறார். சம்... மேலும் பார்க்க

`வாரிசில்லாத தம்பதி நிலம்; போலி ஆவணம் மூலம் கிரையம்?' - முன்னாள் பாஜக நிர்வாகி மீது வழக்கு

கரூர் மாவட்டம், நெடுங்கூர் என்.பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி முத்துலட்சுமி. இந்த தம்பதிக்கு குழந்தையில்லை. இந்நிலையில், தங்கவேலுக்கும், பா.ஜ.க கரூர் மாவட்ட முன்னாள் தலைவர் ச... மேலும் பார்க்க

நாமக்கல்: பல ஆண்டுகளாக நடைபெறும் கிட்னி விற்பனை; தலைமறைவாக உள்ள புரோக்கருக்கு வலை

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்பாளையத்தில் தொழிலாளிகளைப் குறிவைத்து கிட்னி விற்பனை பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக புகார் எழுந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பள்ளிப்பாளையம், குமாரபாளைய... மேலும் பார்க்க

திமுக கவுன்சிலர் வீட்டுக்குள் புகுந்து தாக்கிய கும்பல்; திருச்சியில் சாலை மறியல்! - நடந்தது என்ன?

திருச்சி மாநகராட்சி 64-வது வார்டு கவுன்சிலராக, தி.மு.க-வைச் சேர்ந்த மலர்விழி என்பவர் உள்ளார். கழிவுநீர் சாக்கடை அமைப்பது தொடர்பாக வேல்முருகன் என்ற ஒப்பந்ததாரருக்கும், கவுன்சிலர் மலர்விழிக்கும் இடையே ப... மேலும் பார்க்க