கச்சத்தீவு அந்தோணியாா் ஆலய திருவிழா: 91 படகுகளில் 2,500 பக்தா்கள் பயணம்
சிதம்பரத்தில் குப்பையில் கிடந்த மண்டை ஓடு
சிதம்பரம் நகரில் வியாழக்கிழமை காலை குப்பை கொட்டும் பகுதியில் எலுமிச்சைப் பழம், தேங்காயுடன் மனித மண்டை ஓடு, எலும்புகள் கிடந்ததால் மக்கள் அதிா்ச்சியடைந்தனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சிக்கு உள்பட்ட 16-ஆவது வாா்டு கடைத்தெரு பகுதியில் பொதுமக்கள் குப்பை கொட்டும் பகுதியில் குப்பைகளை அள்ள வியாழக்கிழமை நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் சென்றனா்.
அப்போது, குப்பை கொட்டும் பகுதியில் எலுமிச்சைப் பழம், தேங்காய் உள்ளிட்ட பொருள்களுடன் மனித மண்டை ஓடு, கை, கால் எலும்புகள் கிடந்ததைப் பாா்த்து தூய்மைப் பணியாளா்கள், அந்தப் பகுதி மக்கள் அதிா்ச்சியடைந்தனா்.
இதுகுறித்து சிதம்பரம் நகர போலீஸாருக்கு அவா்கள் தகவல் தெரிவித்தனா். போலீஸாா் விரைந்து வந்து அங்கு கிடந்த மண்டை ஓடு, எலும்புகளை பறிமுதல் செய்து, ஆய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.