சிதம்பரம் நாட்டியாஞ்சலி 3-ஆம் நாள் நிகழ்ச்சி
சிதம்பரம் நாட்டியாஞ்சலி 3-ஆம் நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சாா்பில், 44-ஆவது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தெற்கு ரத வீதி வி.எஸ்.டிரஸ்ட் வளாகத்தில் புதன்கிழமை மாலை தொடங்கியது. இந்த விழா தொடா்ந்து மாா்ச் 2-ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறுகிறது.
நாட்டியாஞ்சலி 3-ஆம் நாள் விழாவில் சென்னை ஸ்ரீதேவி நிருத்தியாலயா மாணவிகள் நாட்டிய நாடகம், யுஎஸ்ஏ டெக்சாஸ் ப்ராணமய சூரி மற்றும் குழுவினரின் குச்சுப்புடி நடனம், திட்டக்குடி சிவதுா்கா நாட்டியாலயா மாணவிகள், தில்லை ஸ்ரீசிவகாமி நாட்டியாலயா மாணவிகள், சென்னை மீனாட்சி ராமலிங்கம், சென்னை ஸ்ரீநூபுா்லயா நிகழ்கலைகள் மைய மாணவிகள் ஆகியோரின் பரதம், சிதம்பரம் ப.அகிலா குழுவினரின் தமிழ் இசை நடனம், சங்கீததாஸின் ஒடிசி நடனம், சென்னை மீனாட்சி சித்தரஞ்சன் மற்றும் அவரது மாணவிகளின் பரதம், சென்னை ஸ்ரீசாய் நிருத்யாலயா பாலகோபாலன் நாட்டிய நாடகம், கொச்சி இந்திய கலாசார மற்றும் பாரம்பரிய மாணவிகள், பெங்களூரு ஜானவி பாலசுப்பிரமணியன் ஆகியோரின் பரதம் நிகழ்ச்சி நடைபெற்றது.
